(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தின் அவசர கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் 50,000 புரோஸ்மைட் ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அவற்றை ஒப்படைத்தார்.
சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் இந்தியா இலங்கைக்கு நம்பகமான நண்பராகவும் முதலில் பதிலளிப்பவராகவும் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2020 மே மாதத்தில் சிறப்பு விமானம் மூலம் இந்தியா 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது.
2021 ஜனவரியில் 500,000 கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கியது. 2022 பெப்ரவரியில் ஒரு இலட்சம் அன்டிஜென் சோதனை கருவிகளை வழங்கியது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2022 இல், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான 1 பில்லியன் டொலர் கடன் வசதி ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
அது மாத்திரமின்றி சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறைக்காக பல்வேறு ஒத்துழைப்புக்களை இந்திய வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM