இடைக்கால முதல்வர் தொடர்பில் என்னுடன் எவரும் கலந்துரையாடவில்லையென்பதுடன் அது குறித்து எனக்கு எவ்வித எண்ணமுமில்லையென ரெலோவின் மத்திய குழு உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிமையையடுத்து இடைக்கால முதல்வாராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் இலங்கை தமிழரசுக் கட்சியின் நேற்றைய நள்ளிரவு கூட்டத்தின் நிறைவில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து வெளியான தகவல் தொடர்பில் கருத்தத் தெரிவிக்கையிலேயே எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடைக்கால முதலவர்; தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி என்னுடன் எவ்விதமான கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அது சம்பந்தமாக எதுவும் அறிவிக்கவுமில்லை. அவ்வாறான எண்ணமும் எனக்கில்லை.

இதேவேளை, என்னுடைய நிலைப்பாட்டை எனது கட்சியான ரெலோவின் அரசியல் குழுவிடம் தெரிவித்துள்ளேன். அக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.