(இராஜதுரை ஹஷான்)
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2018 ஆம் ஆண்டு வெற்றிப் பெற்றதை போன்று அமோக வெற்றிப்பெறுவோம். 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே அதிகாரத்தை கைப்பற்றுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். சிறந்த தரப்பினரை வேட்பாளர்களாக களமிறக்குவோம். வேட்புமனுத்தாக்கலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதை போன்று இம்முறையும் அமோக வெற்றிப்பெறுவோம். தேசிய மக்கள் சக்தியின் பொய் வாக்குறுதிகள் மற்றும் வெறுப்பினை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் பின்னடைவை எதிர்கொள்ளும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். கொழும்பு உட்பட முக்கிய பிரதேச சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்.
2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன பலமடையும். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், ஆட்சிக்கு வந்த பின்னரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக இன்றும் போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறது.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி மக்களை தவறாக வழிநடத்தியது. இதற்கு மக்கள் தகுந்த பாடம்புகட்டுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM