(எம்.ஆர்.எம்.வசீம்)
எனக்கு தெரியாமலே ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கி இருக்கிறது. கட்சி தலைமையின் இந்த தீர்மானத்தால் விரக்தியடைந்திருக்கிறேன். அதனால் எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து ஆராய்வேன் என்று ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது களுத்துறை மாவட்ட தலைவராக இருந்துவந்த லக்ஷ்மன் விஜயமான்ன நீக்கப்பட்டு, களுத்துறை மாவட்ட தலைவராக ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி களுத்துறை மாவட்ட தலைவராக நீண்ட காலமாக நான் செயற்பட்டு வருகிறேன். கட்சி வீழ்ச்சியடைந்த நிலையிலும் கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறேன். இந்நிலையில் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கும்போது எனக்கு அறிவிக்காமலே எனது பெயர் நீக்கப்பட்டு, ராஜித்த சேனாரத்னவுக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
ராஜித்த சேனாரத்ன காலத்துக்கு காலம் கட்சி தாவி வருபவர். ஆனால் நான் எப்போதும் இந்த கட்சியுனே இருந்து வந்துள்ளேன். கட்சி மீது நான் வைத்துள்ள விருப்பம் காரணமாக எந்த கஷ்டமான காலத்திலும் கட்சியைவிட்டு சென்றதில்லை. அவ்வாறு நினைத்தே தற்போதும் என்னுடன் கலந்துரையாடாமல் களுத்துறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்திருக்கிறேன். அதனால் எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM