புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நபரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி 595,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்ற சந்தேக நபர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 08 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 34 வயதுடைய சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (54721) பிறேமதிலக், (8584) புவிசந்திரன், (36841) குமார ஆகிய பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM