(எம்.மனோசித்ரா)
ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே என்பது தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே என்பது தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்று இத்தனை மாதங்கள் கடந்துள்ள போதிலும், ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒருவர் கூட இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
அதுவொருபுறமிருக்கையில், தேசபந்து தென்னகோன் கூட இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. இரவு வேளைகளில் வீடு வீடாகச் சென்று அவரைத் தேடுகின்றனர். அதேபோன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற சந்தேகநபரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஊழல், மோசடிக்காரர்களை கைது செய்வதாகக் கூறியவர்களுக்கு இவ்வாறான சந்தேகநபர்களைக் கூட கைது செய்ய முடியாத நிலைமையே காணப்படுகிறது.
மேலதிக வகுப்பொன்றில் மாணவனொருனை கொடூரமாக தாக்கிய ஆசிரியரும் இன்று தலைமறைவாகியுள்ளார். இவை அனைத்தையும் புறந்தள்ளி 15ஆம் திகதி காலை குரங்குகளை பிடிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் அரசாங்கம் கேலிக்குள்ளாகியுள்ளது. இது அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடு என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் தோற்றுப் போயுள்ளன. பொய்களால் ஏமாற்றமடைந்து அதிருப்தியிலுள்ள மக்களை அதிலிருந்து மீட்பதற்கான பணிகளை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். அதற்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் இயலுமையும் எமக்கிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM