(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தின் பாசிசவாத ஆட்சிக்கு எதிரான அனைவருடனும் இணைந்து பயணிக்க நாம் தயாராக உள்ளோம். அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன பலய, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
வியாழக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் பொய்கள் வரையறையின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பொய்களை கூறுவதை விடுத்து குடிநீரில் உள்ளடக்கப்பட வேண்டிய குளோரின் பதார்த்தத்தின் அளவு சரியாகக் காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
பொய்கள் சமூகமயப்படுத்துவதை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர். எனவே மக்களின் பொறுமைக்கான வரையறை நீண்ட காலத்துக்குச் செல்லாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
சிரேஷ்ட அரசியல்வாதிகளின் தலைமையில் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன பலய, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த அரசாங்கத்தின் பாசிசவாத ஆட்சிக்கு எதிரான அனைவருடனும் இணைந்து பயணிக்க நாம் தயாராக உள்ளோம். எனவே கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறை தேர்தல் பிரசாரங்களிலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM