போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள் - கைதுசெய்யப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி சர்வதேச நீதிமன்றத்தின் காவலில்

Published By: Rajeeban

13 Mar, 2025 | 01:03 PM
image

போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தின் போது பெருமளவானவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி  ரொட்ரிகோடுட்டேர்டேயினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.

மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும் இதனை வரவேற்றுள்ள அதேவேளைசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கு தொடுநர் கரீம் கான் இந்த கைதினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் கீழ் மிகமோசமான குற்றங்கள் என கருதப்படும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான எங்கள்பணியை தொடர்வதற்கு இது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிலிப்பைன்சின் 79 வயது ஜனாதிபதி விமானம் மூலம் நெதர்லாந்திற்கு கொண்டுவரப்பட்டார்.

சந்தேகநபர் ஒருவர் தங்களிடம் ஒப்படைக்கும்போது முன்னெச்சரிக்கையாக அவருக்கு மருத்துவ வசதிகளை வழங்கவேண்டும் என்ற வழமையான நடைமுறையை பின்பற்றியுள்ளதாக ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ள போதிலும்  பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கவில்லை.

அவரது விமானநிலையம் நின்றிருந்த ஹாங்கருக்கு ஒரு அம்புலன்ஸ் சென்றது,மருத்துவர்கள் சக்கரநாற்காலியை உள்ளே கொண்டு சென்றனர் ஹெலிக்கொப்டர் ஒரு பறந்தவண்ணமிருந்தது,அதன் பின்னர் கறுப்பு நிற வாகனம் பொலிஸ் பாதுகாப்புடன் சென்றது அது எங்கு செல்கின்றது என்பது தெரியவில்லை என ஏபி தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களிற்கு டுட்டர்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படும்,அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அறிந்துவைத்துள்ளார் என்பது உறுதி செய்யப்படும்,

விசாரணைகள் இடம்பெற்று குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் நீpதி கிடைப்பதனை நோக்கிய மகத்தான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கை இது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஜெரி அபெல்லா தெரிவித்துள்ளார்.

எனவே இது பிலிப்பைன்சிலும் அதற்கு அப்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களிற்கான நம்பிக்கையான அறிகுறியாகும் என தெரிவித்துள்ள அவர் இந்த கைது மிகமோசமான குற்றங்களில் ஈடுபட்ட உலக தலைவர்கள் உட்பட சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் உலகில் எங்கிருந்தாலும் நீதியை எதிர்கொள்வார்கள் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03