2040ஆம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 10ஆக குறைந்துவிடக்கூடும் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை பல்நோக்கு கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டு அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வளர்ப்பு யானைகள் 160ஆக காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 96ஆகக் குறைந்துள்ளது.
பொதுவாக ஆண் யானைளை விட, பெண் யானைகளின் விகிதாசாரமே அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக 75 சதவீதம் பெண்யானைகள் உள்ளன.
அதேபோல் யானைகள் தமது வாழ்நாளில் சுமார் 4 குட்டிகளை ஈனுகின்றன. அவற்றில் 3 குட்டிகள் பெண்யானைகளாக உள்ளன. எனவே கொம்பன் யானைகளின் விகிதம் குறைந்துகொண்டே போகிறது.
அதே நேரம் எமது வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், எதிர்காலத்தில் யானைகளின் பயன்பாடு நாட்டில் குறைந்துவிடும். அத்துடன், கொம்பன் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். அப்படியாயின் கலாசார நிகழ்வுகளில் யானைகளை பங்குகொள்ள வைப்பது பலத்த சவாலாக மாறிவிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM