எமது வழிபாடுகளும் மரபுகளும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. சுமார் 5000 ஆண்டுகள் பழமையான சிந்துசமவெளியை புரட்டிப் பார்த்தால் பெண் தெய்வ வழிபாட்டு ஆதாரங்களும் காணக்கிடைக்கின்றன. புராணங்கள் தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்று சான்றுகளில் கொற்றவை வழிபாடு காணப்படுகிறது.
மாரியம்மன் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இலங்கையில் மத்திய மாகாணத்தின் மாத்தளையில் பெரும் கோயில் கொண்டு வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசி மக மகோற்சவம் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.
மாசி மாத மக நட்சத்திரத்தில் இரதோற்சவம் காணும் ஸ்ரீ முத்துமாரியம்மன் 25 நாட்கள் மகா உற்சவம் கொள்வாள். நாட்டில் பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தாலும் மாத்தளை மாரி மகோற்சவம் தனக்கே உரிய பணியையும் , தனித்துவத்தையும் கொண்டுள்ளது.
இலங்கையில் மிகப்பெரிய அழகிய வசந்த மண்டபத்தைக் கொண்ட ஒரே தேவஸ்தானம் மாத்தளையாகும்.
மும்மலத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வசந்த மண்டபம் இதுவாகும் , ஆணவம், கன்மம், மாயை நீங்கினால் இறைவனை அடையலாம் என்பது தத்துவம். அதே போன்று மூன்று வசந்த மண்டப திரைகளை நீக்கி அம்பிகையை தரிசனம் செய்யும் அமைப்பை மகோற்சவ அம்சமாக கொண்ட வசந்த மண்டபமாகும்.
16 வகையான மிக விரிவான சோடச உபசாரங்கள் , எங்கும் காண அரிதான தீபாராதணை, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத அம்பாள் அலங்காரம் மற்றும் பஞ்சமூர்த்திகளின் அணிவகுப்பு என்று கூறிக்கொண்டே போகலாம் இம்மகா வசந்த மண்டப பூஜையை.
பஞ்சரத பவனி புகழ் மாத்தளையில் 1983ஆம் ஆண்டு சந்தன மரத்தால் ஆக்கப்பட்ட உயர்ந்த அழகிய தேர் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
தொடர்ந்து சில ஆண்டுகள் தேரோட்டம் தடைப்பட்டு பின்னர் தற்போதுள்ள சித்திரத்தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டம் ஆரம்பமானது.
தேர் என்றாலே மாத்தளை என்று சொல்லும் வகையில் இன்று இந்த திருவிழா பிரசித்திப் பெற்றுள்ளது.
மாசி மக நட்சத்திரம் கூடும் சூரிய உதயத்தில் தேர் ஏறி இரண்டு சூரிய அஸ்தமனங்களில் அம்பாள் தேரிலேயே வீற்றிருக்கும் திருவிழா இதுவாகும்.
மாசிமகம் என்றாலே மாத்தளை எனும் வகையில் அம்பாள் தேரில் இருக்கும் அழகைக் காண இனம்,மதம், பேதமின்றி நான்கு திசைகளில் இருந்தும் மக்கள் கூடுவர்.
இரண்டாம் நாள் பஞ்சரதங்களும் ஆலயம் திரும்பும் ஆரவாரம் காண மெய் சிலிர்க்கும். மகாரதங்கள் ஆலயத்தை வந்தடைந்ததும் அம்பாளுக்கு பச்சை பட்டுத்துணி, பச்சை நிற ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மரிக்கொழுந்து சூடி , ஆடி அசைந்து சிங்காசனத்தில் அம்பாள் வலம் வரும் காட்சியை காண கண்கள் 1000 போதாது என்றே சொல்லலாம்.
மறுநாள் சூரிய உதயத்தில் பால்குடம், நவசக்தி பூஜை தொடர்ந்து அம்பாள் மகக்குளத்தில் தீர்த்தமாட எழுந்தருளுவாள். இம்மகோற்சவத்தில் 22ஆம் நாள் பகல் நடைப்பெறும் சிவனடியார் திருவிழா. ஆன்று மாலை மிருகயாத்ரா உற்சவம் நடைப்பெறும்100 வருடம் பழமை வாய்ந்த குதிரை வாகனத்தில் அம்பாள் மிருகயாத்திரைக்கு புறப்படுவாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏதிரகாலத்திலும் மாறாத அபிஷேக கிரமம் கொண்ட இவ்வாலயத்தின் திருவிழாவில் மாத்தளை இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிட்டுக் கூறவேண்டிய தொன்றாகும்.
சுப்ரமணிய குருக்கள் பரம்பரை வந்த சிவ ஸ்ரீ சரவணபவானந்த குருக்கள், சிவ ஸ்ரீ சிவானந்த குருக்கள் ஆகியோரின் பங்களிப்பு காலத்தால் மறக்க இயலாது.
இந்துக்கள் வாழ்விலே ஒருமுறையேனும் இந்த மகோற்சவத்தை கண்ட பிறப்பயன் பெற வேண்டும் என்றால் அது மிகையல்ல.
- சித்ரகணபதி செந்தூர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM