நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா? - கணவர் ரகு விளக்கம்

Published By: Digital Desk 2

13 Mar, 2025 | 10:29 AM
image

இந்திய நடிகை சௌந்தர்யாவின் மரணத்தின் பின்னணியில் நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தக் கோரி, தெலங்கானா மாநிலம் கம்மம் பொலிஸ் துணை ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. குடும்பப்பாங்கான நடிகை என இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. 

தமிழில் நடிகர் கார்த்திக்குடன் இவர் நடித்த “பொன்னுமணி” படத்தை தொடர்ந்து இவர் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, சொக்கத்தங்கம் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.

இதேபோன்று தெலுங்கிலும் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்பாபு என பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் 2003ஆம் ஆண்டில் உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு பா.ஜ.க.வில் இணைந்தார்.

கடந்த 17.4.2004 அன்று தேர்தல் பிரச்சாரத்துக்காக நடிகை சௌந்தர்யாவும் அவரது சகோதரர் அமர்நாத்தும் பெங்களூருவில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம் நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டனர். 

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம், பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தின் காந்தி க்ருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப்பிடித்து விழுந்தது. இந்த கோர விபத்தில் சௌந்தர்யாவும், அவரது சகோதரர் அமர்நாத்தும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அந்த சமயத்தில் நடிகை சௌந்தர்யா கர்ப்பமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் நடந்து சுமார் 21 ஆண்டுகளாகிவிட்டன. இந்நிலையில், நடிகை சௌந்தர்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியரிடமும், பொலிஸ் துறை ஆணையரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் சிட்டிமல்லு தெரிவித்துள்ளதாவது,

“ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையம் அருகே நடிகை சௌந்தர்யாவுக்கு இருந்த  6 ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்டார். ஆனால், சௌந்தர்யா அவருக்கு நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த தகராறு ஏற்பட்ட பின்னரே சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தற்போது அந்த இடம் நடிகர் மோகன்பாபு வசம் உள்ளது. இது எப்படி சாத்தியம்? ஆதலால், நடிகை சௌந்தர்யாவின் மரணம் ஒரு சதித் திட்டமாக கூட இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நடிகர் மோகன்பாபுவை விசாரிக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து, நடிகை சௌந்தர்யாவின் மரணம் குறித்து அவரது கணவர் ரகு தெரிவிக்கையில்,

சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன்பாபுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. 25 வருடங்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் எங்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.

அவர் சௌந்தர்யாவுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. அவருடன் எங்களுக்கு எந்த நில பிரச்சினையும் இல்லை. இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என விளக்கமளித்துள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23