உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது – ரொய்ட்டர்

Published By: Rajeeban

13 Mar, 2025 | 10:17 AM
image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த இருவர் இதனை ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா பரந்துபட்ட நிபந்தனைகளைமுன்வைத்துள்ளது, இந்;த நிபந்தனைகள் ரஸ்யா முன்னர் முன்வைத்த நிபந்தனைகள் போன்றவை என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது,கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஸ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது.

இதேவேளை உக்ரைன் போருக்கு அடிப்படை காரணங்களான நேட்டோவின் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பு குறித்தும் சமீபகாலமாக ரஸ்யா சுட்டிக்காட்டி வந்துள்ளது.

ரஸ்யா தனது பட்டியலில்; புதிதாக என்ன விடயங்களை சேர்த்துக்கொண்டுள்ளது இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா தயாரா என்ற விபரங்கள்  வெளியாகவில்லை.

கடந்த மூன்று வாரங்களாக ரஸ்ய அமெரிக்க அதிகாரிகள் இந்த நிபந்தனைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி இணங்கியுள்ள நிலையில் ரஸ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிவதற்காக அமெரிக்க ஜனாதிபதி காத்திருக்கின்றார்.

யுத்த நிறுத்தத்திற்கான புட்டினின் அர்ப்பணிப்பு குறித்து நிச்சயமற்ற நிலையே காணப்படுகின்றது.

முன்னாள் கேஜிபி உறுப்பினரான விளாடிமிர் புட்டின் யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா உக்ரைன் ஐரோப்பாவிற்கு இடையில் கருத்துவேறுபாடுகளை உருவாக்க முயல்வார் என அமெரிக்க அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிபுணர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03