(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிழங்கு அறுவடை காலத்தில் அரசாங்கம் கிழங்கு இறக்குமதி செய்வதை நிறுத்தி, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் தரகு பணத்துக்காக இவ்வாறு செய்தார்கள். அதனை இந்த அரசாங்கம் செய்யாது என எதிர்பார்க்கிறோம் என வே, இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் 360 நாட்களும் மரக்கறி விவசாயம் செய்யும் இடம் நுவரெலியா பிரதேசமாகும். அதனால் அந்த விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பாரக்க விவசாய அமைச்சர் அந்த பிரதேசத்துக்கும் விஜயம் செய்ய வேண்டும். குறிப்பாக கிழங்கு பிடுங்கும்போது அரசாங்கம் கிழங்கு இறக்குமதி செய்கிறது. கடந்த அரசாங்கமும் இதனை செய்தது. தரகுப்பணத்துக்கே செய்தார்கள். இந்த அரசாங்கம் விவசாயிகள் தொடர்பில் சிந்தித்து அவ்வாறு செய்யாது என எதிர்பார்க்கிறோம்.
நுவரெலியாவில் ஒரு கிலாே கரட் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது கொழும்புக்கு கொண்டுவந்து விற்பனை செய்யும்போது கிலாே 1000 ரூபாவாகிறது. விவசாய திணைக்களத்தின் சரியான முகாமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணம். அதேபோன்று மலையகத்தில் விவசாய மண், மற்றும் இதர பரிசோதனைகளுக்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அது இடம்பெறுவதில்லை. இது தொடர்பில் அரசாங்கத்தை குற்றம் சுமத்தப்போவதில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தெரிவிக்கிறேன்.
மேலும் ஒரு கிலாே கிழங்கு உற்பத்தி செய்ய 200 ரூபா செலவாகிறது. அப்படியானால் 250 ரூபாவுக்காவது விற்பனை செய்தாலே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. அதனால் அரசாங்கம் ஏப்ரல், மே.ஜூன் மாதங்களில் கிழங்கு இறக்குமதியை நிறுத்த வேண்டும் அல்லது இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.
அதேநேரம் நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு மேலதிக வருமானமாக அவர்களுக்கு பொதுவான கால்நடை பண்ணை அமைத்து கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வழி ஏற்படுத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதாலே அந்த விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் பால் உற்பத்திக்கு தேவையான வசதிகளை ஏற்படு்த்திக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM