லங்கா ஹொஸ்பிடல்ஸ் அதன் மகளிர் நல மையத்தை (Women’s Wellness Centre - WWC) பெண்களின் சுகவாழ்வைப் பேணுவதிலான விசேடத்துவத்தின் ஒரு தசாப்தத்தை நெருங்கி இவ்வேளையில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் ஒரு முக்கியமான தருணத்தை இணைக்கிறது. இது, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்குவதில் லங்கா ஹொஸ்பிடல்ஸ் மருத்துவமனை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகளிர் நல மையமானது, முழுமையான சுகாதார சேவைகளின் நம்பகமான வழங்குநராக இருந்து வருகிறது. முழுமையான நோய் கண்டறிதல் பொதிகள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை தெரிவு வசதிகளை இது வழங்குகிறது.
இந்த முக்கிய தருணத்தில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள், பரந்த அளவிலான விசேட சேவைகள், வசதியான மற்றும் பிரத்தியேகமான சூழலில் பெண்களுக்கான உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்ட, நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை WWC அறிமுகப்படுத்துகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி தீப்தி லொக்குஆராச்சி, ”சுகாதாரப் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள ஒரு வைத்தியசாலை எனும் வகையில், பெண்களின் சுகவாழ்வை ஆதரிப்பதற்காக எமது சேவைகளை தொடர்ச்சியாக மேம்படுத்திச் செல்ல நாம் உறுதி பூண்டுள்ளோம். இந்த மீள் தொடக்கமானது ஒரு மேம்படுத்தலை கொண்டிருப்பதற்கு அப்பால, பெண்களால் அணுகக்கூடிய, உயர்தர மற்றும் விரிவான பராமரிப்பை சேவைகளை வழங்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதியாகும். பெண்கள் தமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த மருத்துவ பராமரிப்பைப் பெறுவதை இது உறுதி செய்கிறது” என்றார்.
இந்த கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக, Mammograms, Pap smear சோதனை ஆகிய வசதிகளை கணிசமாகக் குறைக்கப்பட்ட கட்டணத்தில் வழங்குவதன் மூலம் அத்தியாவசிய சுகாதார பரிசோதனைகளை மேலும் அணுகக்கூடியதாக லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆக்கியுள்ளது.
இந்த திட்டமானது, முன்னேற்றமான சுகாதார முகாமைத்துவத்தை பேணுதல் மற்றும் முன்கூட்டியே நோய்களைக் கண்டறிதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் மத்தியில் மேம்பட்ட சுகவாழ்வுக்கு பங்களிக்கிறது. அது மாத்திரமன்றி, அழகுசாதன அறுவை சிகிச்சைகளுக்கான மருத்துவமனை கட்டணங்களில் 20% தள்ளுபடியை மருத்துவமனை வழங்குகிறது.
பெண்களின் நம்பிக்கை மற்றும் சுய பராமரிப்புக்கு ஆதரவளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை இது மேலும் வலியுறுத்துகிறது.
மேம்படுத்தப்பட்ட பெண்கள் நல மையமானது, துல்லியமான மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான அதிநவீன டிஜிட்டல் மெமோகிராபி, விரிவான சுகவாழ்வுக்கான பெண்களுக்கான பரிசோதனைகள் மற்றும் விசேட மகளிர் மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குகிறது. கர்ப்பிணிகள் மற்றும் புதிதாக தாய்மார்களாக மாறப் போகின்றவர்கள் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிபுணத்துவம் வாய்ந்த பராமரிப்புகளை பெற்று பயனடையலாம். இதேவேளை, கருவுறுதல் ஆலோசனை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் தொடர்பான பெண்களுக்கு இனப்பெருக்கம் தொடர்பான சிறந்த சுகாதார முடிவுகளை எடுப்பதற்கான மதிப்புமிக்க வழிகாட்டலையும் இம்மையம் வழங்குகின்றது. ஒவ்வொருவருக்கும் அவசியமான வகையில் திட்டமிடப்பட்ட மாதவிடாய் முகாமைத்துவ திட்டங்கள் மற்றும் உளவியல் சுகவாழ்வு ஆதரவு ஆகிய சேவைகளும் இம்மையத்தினால் வழங்கப்படும் முழுமையான பராமரிப்பு அணுகுமுறை காட்டுகின்றன.
இலங்கையில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் போன்றவற்றின் அதிகரித்து வரும் போக்குடன், இலங்கையில் பெண்கள் தொடர்பான ஏனைய முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகளை தடுப்பதற்கான பராமரிப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிபுணத்துவ சிகிச்சையை ஊக்குவிக்கும் தனது பணியில் லங்கா ஹொஸ்பிடல்ஸ் உறுதியாக இருந்து வருகின்றது.
மகளிர் சுகவாழ்வு மையத்தின் மீள்தொடக்கமானது, இந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைவதோடு, ஒவ்வொரு பெண்ணும் ஆதரவுமிக்க மற்றும் ஊக்கமளிக்கப்படுகின்ற சூழலில் உயர்தர சுகாதாரப் பராமரிப்பை பெறுவதை இது உறுதி செய்கிறது.
இந்த பிரத்தியேக சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்கள் உடல்நலன் மற்றும் சுகவாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, லங்கா ஹொஸ்பிடல்ஸ் மகளிர் சுகவாழ்வு மையத்தைப் பார்வையிடுமாறு பெண்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் சந்திப்புகளை மேற்கொள்ள +94 11 543 1106, +94 11 543 1103, +94 11 543 1104 ஆகிய தொலைபேசிகள் ஊடாக அல்லது லங்கா ஹொஸ்பிடல்ஸ் மருத்துவமனைக்கு நேரடியாக விஜயம் செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM