வனவிலங்கு வாழ்வியலின் அழகிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக, Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life இன் ஏற்பாட்டில் உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் இயற்கை பாதுகாப்பு நிபுணருமான போல் கோல்ட்ஸ்டீன் கலந்துகொள்ளும் வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி Cinnamon Life இல் நடைபெறவுள்ளது.
இயற்கைச் சூழலின் அழகை வெளிப்படுத்தும் தனித்துவமான வாய்ப்பை வழங்கும் இந்த "The Impossible Shot" வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி நிகழ்ச்சியானது, அழகிய மற்றும் அசாதாரணமான வனவிலங்கு புகைப்படங்களை எடுப்பதற்குத் தேவையான அர்ப்பணிப்பு மற்றும் திறன் பற்றிய புரிதலை அதிகரிக்கும்.
வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் வழிகாட்டுதலில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட போல் கோல்ட்ஸ்டீன், கென்யா, ஸ்பிட்ஸ்பெர்கன், அண்டார்டிகா உள்ளிட்ட பல நாடுகளின் மிகவும் கடினமான வனப்பகுதிகளில் புகைப்படக்கலை அனுபவங்களைப் பெற்றுள்ளார். வனவிலங்கு புகைப்படக்கலையில் அவரது கலைத்திறன், புரிதல் மற்றும் கருத்துக்கள் உலகளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சவால்மிக்க புகைப்படக்கலையில், இதுவரை அனுபவிக்காத அற்புதமான காட்சிகளுக்கு அழைத்துச் செல்லும் சிறப்பு திறன் கொண்ட போல் கோல்ட்ஸ்டீன், தான் புகைப்படம் எடுத்த கவர்ச்சிகரமான தருணங்களை இந்த நிகழ்வில் பங்குபற்றுபவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
அதேசமயம், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இலங்கையின் விருது பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரும், இயற்கை பாதுகாப்பு நிபுணருமான சித்ராலல் ஜயதிலக்க, "Chasing a Dream" எனும் தலைப்பில் இந்நிகழ்வில் மற்றொரு சிறப்பு விளக்கக்காட்சியை வழங்கவுள்ளார். இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மையை உலகிற்கு காட்சிப்படுத்தியுள்ள சித்ராலல், விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மூலம் வனவிலங்கு உலகின் சிறந்த தருணங்களைப் புகைப்படம் எடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து பங்குபற்றுபவர்களுக்கு விளக்குவார்.
படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கு அப்பால் "The Impossible Shot” நிகழ்ச்சி இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான சுற்றுலாவை ஊக்குவிப்பதிலும் Cinnamon Nature Trails இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும், கலைகள் மற்றும் புகைப்படத்தை ஆதரிப்பதில் Cinnamon Life இன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் முன்னணி இயற்கை சுற்றுலா நிறுவனங்களான Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life ஆகியவை கூட்டாண்மை மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து தங்கள் ஆய்வுகளை மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் Cinnamon Hotels & Resorts, செலான் வங்கியுடன் இணைந்து, இலங்கையர்களுக்கு அதிக நன்மைகள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்ட சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.
"The Impossible Shot” நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூபாய் 7,500/- ஆகும், மேலும், இந்த டிக்கெட்டுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் www.cinnamonboxoffice.com இல் இருந்து முன்பதிவு செய்யலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM