மலேசிய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையில் ஆய்வுப் பயணம் - பலருடன் கலந்துரையாடல்! 

12 Mar, 2025 | 08:17 PM
image

மலேசியாவிலிருந்து 15 அரசு சாரா அமைப்புகளைச் (NGO) சேர்ந்த குழுவினர் மொழி, கலாசாரம், அரசியல் மற்றும் வணிகம் தொடர்பான ஆய்வுப் பயணத்தினை மேற்கொள்வதற்கு கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த விஜயத்தின்போது அவர்கள் முதலில் மலையகத்துக்குச் சென்றனர்.  அங்கு பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களைச் சந்தித்ததோடு, தோட்ட பாடசாலைகளைப் பார்வையிட்டு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொண்டதுடன் கல்வி மற்றும் கற்பித்தல் நடைமுறைகள் சிறப்பாக இருப்பதை அவதானித்த அவர்கள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள் போதுமான நிலையில் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர்களையும் சந்தித்து, மக்களின் வாழ்க்கைமுறையைப் பற்றிப் பேசியதுடன் கூட்டுறவுத் துறையின் மூலம் எவ்வாறு சிக்கனச் சேமிப்பை செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம் என்பது பற்றியும்  கலந்துரையாடல்  நடத்தினர்.தொடர்ந்து  மலையக அரசியல் தலைமைகளையும் சந்தித்தனர்.  

அதனைத் தொடர்ந்து, Harizantol ngo forum எனும் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் இவர்கள் கலந்து கொண்டு  சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு  “சிங்கப் பெண்” விருது கொடுத்து கௌரவித்தனர்.

பிறகு, சில வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்புள்ளவர்களைச் சந்தித்து, மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையே வணிக ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதுபற்றி கலந்துரையாடினர். 

அத்துடன் கண்டியில், ஒரு தோட்டப் பகுதியில் நடைபெற்ற காமன் கூத்து  திருவிழாவில் கலந்து கொண்டனர்.  மேலும், கண்டியில் பெண்கள் அமைப்பொன்று நடத்திய இருதரப்பு கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

அதைத் தொடர்ந்து, இலங்கை சமாதான (SAMADANA) அமைப்பைச் சந்தித்து, சமூக மேம்பாடு மற்றும் வணிக ஒத்துழைப்பைப் பற்றிப் பேசினர்.

அத்துடன் மனித உரிமை அமைப்பையும் சந்தித்து, தமது இலங்கைப் பயணத்தின் நோக்கம்  பற்றியும்  கலந்துரையாடினர். 

அடுத்து, REDA (Regional Economic Development Agency) அமைப்பினரைச் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே வணிக ஒத்துழைப்பை குறித்து  ஆக்கபூர்வமாக பேசியுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக கொழும்பில்  சில வணிகர்களைச் சந்தித்து, ஒருங்கிணைந்து பணியாற்றி வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்தனர். 

அத்துடன்,  தாவரவியல் மற்றும தோட்ட உட் கட்டமைப்பு அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பைச் சந்தித்தனர்.

அதனை தொடர்ந்து, புதிய அலை கலை வட்டம் அமைப்பைச் சேர்ந்த ராதாமேத்தா மற்றும் அவரது குழுவினரைச் சந்தித்து,  இரு நாடுகளுக்கும் இடையிலான கலை, இலக்கிய மற்றும் கலாசாரப் பரிமாற்றம் குறித்த பல விடயங்களைப் பேசியதோடு இரு நாடுகளும் ஒன்றிணைந்து கலாசாரப் புரிதலை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர்.

இதன்போது அக்குழுவினரால் கலைஞரும் ஊடகவியலாளருமான ராதாமேத்தா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09