தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களின் தாக்கம் பற்றி தேர்தல் பங்குதாரர்களிடையே முல்லைத்தீவு மாவட்ட மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் அரசியல் பன்முகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் எனும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அரசியல் பன்மைத்துவம் தேர்தல் செயன்முறைகளில் பிரஜைகளின் / குடிமக்களின் ஈடுபாடு மற்றும் தகவல்களின் தாக்கம் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (12) நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் த.கேதுர்சாவின் தலைமையில் முல்லைத்தீவு இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் இன்று (12) காலை 9.30 மணி முதல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
இந்த கருத்தரங்கில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் A .M.N. விக்ரர் மற்றும் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ். அனோஜன் ஆகியோர் கலந்துகொண்டு “தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் அரசியல் பன்மைத்துவம் தேர்தல் செயன்முறைகளில் பிரஜைகளின்/ குடிமக்களின் ஈடுபாடு மற்றும் தகவல்களின் தாக்கம்” எனும் விடயப்பரப்பில் இலங்கை முழுவதும் 800 பேரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி குறை நிறைகள், மேலும் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் முகமாக இந்த செயலமர்வு இடம்பெற்று வருகிறது.
இக்கலந்துரையாடலில் அரசியல் பிரதிநிதிகள், பொலிஸார், ஊடகவியலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM