''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன் பின்னர் துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமானது"- பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளிடம் சிக்குண்ட புகையிரதத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள்

Published By: Rajeeban

12 Mar, 2025 | 05:32 PM
image

dawn

express tribune

பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளால் பிடிக்கப்பட்ட புகையிரதத்திலிருந்து மீட்டகப்பட்டவர்கள் தாங்கள் நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கடவுள் எங்களை காப்பாற்றினார் என முதிய பெண்ணொருவர் குவாட்ட புகையிரதநிலையத்தில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட பயணிகள் இந்த புகையிரதநிலையத்திற்கே கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கடவுள் எங்களிற்கு உதவுவார் ஆனால் தற்போது நிலைமை சரியில்லைஎன கவலையுடன் ஒருவர்தெரிவித்துள்ளார்.

ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன் பின்னர் துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமானது என நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ள அவர் ஆர்பிஜி தாக்குதல்களும் பாரிய வெடிப்புச்சத்தங்களும் கேட்டன, என தெரிவித்தார்.

அவருடன் காணப்பட்ட பெண்ணொருவரும்  அதே போன்ற விடயங்களை தெரிவித்துடன் கடவுள் எங்களை காப்பாற்றி விட்டார் கடவுள் எங்களை அழிக்கட்டும் என குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட பயணிகளில் ஒருவர் முகமட் அஸ்ரவ். இவர் குவாட்டாவிலிருந்து லாகூரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்,புகையிரதத்தின் மீதான தாக்குதலால் எவராவது உயிரிழப்பதை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு ஆறு ஏழு பேர் உயிரிழந்ததை பார்த்தேன் என  அவர் குறிப்பிட்டார்.

அனைவரும் அச்சத்தினால் அமைதியாகயிருந்தனர் எவரும் எங்கும் எவரையும் பார்க்கவில்லை என முதியவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள் பெண்களையும் முதியவர்களையும் தனியாக நிற்கச்சொன்னார்கள்பின்னர் எங்களை போகச்சொன்னார்கள் என தெரிவித்த அவர் நாங்கள் ஏழு எட்டு கிலோமீற்றர் நடந்து பனீர் புகையிரத நிலையத்தை அடைந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

புகையிரதத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நிலவிய குழப்பமான நிலையை விபரித்துள்ள மீட்கப்பட்ட பயணியொருவர் பாதுகாப்பிற்காக பயணிகள் புகையிரதத்திற்குள் விழுந்துபடுக்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனகுறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோக சத்தங்களை வெடிப்புச்சத்தங்களை கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் அனைவரையும் புகையிரதத்திலிருந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டனர்  ஆனால் பயணிகள் புகையிரதத்திலிருந்து இறங்க தயங்கினார்கள் என பயணியொருவர் நான் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு இறங்கினேன் அவர்கள் இறங்கச்சொல்கின்றார்கள்,

நாங்கள் அவர்கள் சொல்வதை செவிமடுக்கவேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் உள்ளே வந்து சுட்டுவிடுவாhகள் " என அந்த பயணி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03