(நெவில் அன்தனி)
இந்தியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ரி20 கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்கனவே தகுதிபெற்றிருந்த இலங்கை மாஸ்டர்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் குமார் சங்கக்கார குவித்த சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை 9 விக்கெட்களால் வெற்றிகொண்டது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த மொத்த எண்ணிக்கையில் 70 வீதத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குமார் சங்கங்கார தனி ஒருவராகப் பெற்றுக்கொடுத்தார்.
47 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட குமார் சங்கக்கார 19 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 106 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
16 ஓட்டங்களைப் பெற்ற ரொமேஷ் களுவித்தாரணவுடன் 108 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த குமார் சங்கக்கார, பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் அசேல குணரட்னவுடன் 42 ஓட்டங்களபை; பகிர்ந்தார்.
அசேல குணரட்ன 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அப் போட்டியில் முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் பில் மஸ்டர்ட் 50 ஓட்டங்களையும் டிம் ப்ரெஸ்னன் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 21 ஓட்டங்கள் இங்கிலாந்தின் மொத்த எணண்ணிக்கைக்கு கிடைத்தது.
பந்துவீச்சில் இசுறு உதான, டில்ருவன் பெரேரா, அசேல குணரட்ன, சத்துரங்க டி சில்வா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM