அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு

12 Mar, 2025 | 09:01 PM
image

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, சம்மாந்துறை போன்ற கரையோர பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

சுமார் 150 இற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வருகை தந்து அறுவடைக்கு தயாராக இருக்கின்ற வேளாண்மைகளையும், பயன் தரும் பயிர் வகைகளையும், கடைகளையும் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

காட்டு யானைகளின் தொல்லைகளினால் பொது மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு வேளைகளில் நிந்தவூர் – அக்கரைப்பற்று வீதியிலும், காரைதீவு – அம்பாறை வீதியிலும் நடமாடுவதற்கு பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

இக்காட்டு யானைகளை காட்டுப் பகுதிகளுக்கு கொண்டு செல்லுமாறு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளை பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இதேவேளை, புதன்கிழமை  (12) சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை பட்டப்பகலில் காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் உள்ள வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருந்தன.

அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களுக்கு மத்தியில் மிகுந்த செலவுடன் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை காட்டு யானைகள் அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியதென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57