எம்மில் பலரும் தற்போது சந்தித்து வரும் ஆரோக்கிய சவால்களில் குழந்தைபேறின்மையும் ஒன்று. இதற்காக முன்னர் பெண்கள் தான் காரணம் என்று சொல்லிவந்தனர். தற்போது பெண்களைக் காட்டிலும் ஆண்களே இத்தகைய பாதிப்பிற்கு காரணம் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆண்களிடமுள்ள உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைபாடு, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் உயிரணுக்களும் வீரியமில்லாமலும், நீந்திச் செல்லும் தன்மை குறைவாகவும் இருக்கிறது. இதற்கு எத்தனையோ மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டு நிவாரணமளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள் தங்களிம் உயிரணுக்களை ஆரோக்கியமாகவும், வீரியமுடனும் வைத்திருக்கவேண்டும் என்றால் தினமும் இரவு 8 மணிக்குள் உறங்க செல்லவேண்டும். அத்துடன் 8 மணித்தியாலம் வரையிலான தூக்கத்தையும் கொண்டிருக்கவேண்டும். உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் ஒரு குறிப்பிட்ட 2 மணித்தியாலங்களில் ஆரோக்கியமாக இயங்கும் என்பதும், அந்த வகையில் இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரையில் ஆண்களிடமுள்ள உயிரணுக்கள் உயிர்ப்புடன் இயங்குகிறது என்பதும் தான் இதன் மருத்துவ பின்னணி. 

இரவு நெடுநேரம் விழித்திருந்தும், குறைவான உறக்கத்தைக் கொண்டிருக்கும் ஆண்கள் தான் உயிரணுக்கள் தொடர்பான பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். எனவே மருத்துவர்கள் ஏற்கனவே பரிந்துரைத்திருக்கும் விடயங்களை பின்பற்றுவதுடன் இந்த 8 மணிக்குள் தூங்கச் செல்வதையும், 8 மணித்தியாலம் வரை தூங்குவதையும் தொடர்ந்தால் உங்களின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான உயிரணுக்கள் இருந்தால் மக்கட்பேறு உறுதியாக கிட்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

Dr. தோமஸ்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்