மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

12 Mar, 2025 | 03:38 PM
image

பான் இந்திய நட்சத்திரமாக ஜொலித்து வரும் மாதவன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டெஸ்ட்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏரீனா' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சசி காந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டெஸ்ட்' எனும் திரைப்படத்தில் ஆர். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். 

இந்திய துடுப்பாட்ட வீரர்களின் வாழ்வியலையும், துடுப்பாட்டத்தையும் மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்திருக்கிறார். 

இந்தத் திரைப்படம் நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதியன்று நேரடியாக வெளியாகிறது.

இந்த தருணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற 'இட்ஸ் நவ் ஆர் நெவர் கிளாடியேட்டர் இன் தி பாட்டில் ஜோன்..' எனத் தொடங்கும் ஆங்கில மொழி சொற்கள் அதிகமாக இடம் பிடித்திருக்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த பாடலில் 'முயற்சி செய் வென்று வா வீரா' என ஐந்து சொற்கள் மட்டும்தான் தமிழில் இருக்கிறது. இந்த பாடலை எழுதி பாடியிருக்கிறார் பிரபல றாப் இசை பாடகரான யோகி பி. இந்தப் பாடலில் இந்திய துடுப்பாட்டத்திற்கு பங்களிப்பு செய்த நட்சத்திர வீரர்கள் இடம் பிடிப்பதால் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23