இலங்கை மக்கள் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்... அதை நேரடியாக இப்போது பார்க்கிறேன் என இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
கொழும்பு, வெள்ளவத்தையில் சுசி ஆடையகத்தின் (Zuzi Clothing Store) திறப்பு விழா இன்று புதன்கிழமை (12) கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாடிய போதே கீர்த்தி சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதோடு, அவருக்கு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நாடா வெட்டி ஆடையகத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய போது நடிகை கீர்த்தி சுரேஷ்,,
என்னை இங்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக நான் மீண்டும் இலங்கைக்கு வருவேன். இலங்கை மக்கள் மிகவும் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இப்போது நான் நேரடியாக பார்க்கிறேன் என்றார்.
ஒரு முன்னணி ஆடையகமான சுசி ஹட்டன், கொழும்பு கொட்டாஞ்சேனையிலும் தனது கிளைகளை பரப்பி வலம் வருகின்றது. தற்போது இதன் புதிய கிளையானது இலக்கம் 42A, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு என்ற முகவரியில் அமையப்பெற்றுள்ளது.
ஆடையகத்தின் திறப்பு விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM