தமிழிலும் பிரபலமான நடிகையான பாவனா சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டோர்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெய் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி டோர்' எனும் திரைப்படத்தில் பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயப்பிரகாஷ், சிவரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ் ,பாண்டி ரவி ,சங்கீதா ,பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி. கௌதம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வருண் உன்னி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை பி. என். ஜுன் டிரீம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நவீன் ராஜன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சபையர் ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு படமாளிகையில் திரில்லிங்கான அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதிப்படுத்துவதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதனிடையே அஜித்குமார் நடிப்பில் 2010 ஆண்டில் வெளியான 'அசல்' படத்திற்கு பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து நடிகை பாவனா தமிழில் நடித்திருப்பதால் 'தி டோர்' படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM