இன்றைய திகதியில் கடும் உழைப்பு , விடா முயற்சி , தன்னம்பிக்கை , அரசாங்கத்தின் அனுசரணை, நண்பர்களின் ஒத்துழைப்பு, மக்களின் ஆதரவு , குருமார்களின் ஆசி, ஆண்டவனின் கருணை , குடும்ப உறுப்பினர்களின் கூட்டுப் பிரார்த்தனை, என பல்வேறு அம்சங்களை வரமாக பெற்று, தெரிந்த தொழிலில் ஈடுபட்டு, சிறப்பாக உழைத்து, ஓரளவு பொருள் ஈட்டி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவை எட்டிப் பிடித்திருக்கும் தருணத்தில் எம்மில் சிலர் எம்முடைய இந்த வளர்ச்சியை கூட பொறுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து உங்களின் வசதிகளை பார்த்து வயிறு எரிவார்கள்.
இவர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தந்து.. தங்களிடம் உள்ள எதிர்மறை ஆற்றலை பரவ விட்டு சென்று விடுவார்கள். நாமோ அவர்களை விருந்தினர்களாக கருதி, அவர்களை விருந்தோம்பல் செய்து, வழி அனுப்பி வைத்திருப்போம். அவர்கள் விட்டுச் சென்ற கண்களுக்கு புலப்படாத பொறாமை தீயை உடனடியாகவும் துல்லியமாகவும் அவதானிக்காமல் விட்டு விடுவோம்.
இதனால் எம்முடைய வீட்டிற்குள் எமக்கே தெரியாமல் எதிர்மறை ஆற்றல் பரவத் தொடங்கும். இவை தோஷமாக அதிகரித்து உங்களின் வளர்ச்சியை பாதிக்கவும் தொடங்கும். இதனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வீடுகளில் அனைத்து தருணங்களிலும் நேர் நிலையான ஆற்றல் பரவுவதற்கும், எம்முடைய கண்களுக்கு புலப்படாத எதிர்மறை ஆற்றலை பரவ செய்திருப்பதை அவதானித்து அழிப்பதற்கும் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பூசணிக்காய் ,வேப்பெண்ணெய், சாம்பிராணி புகை, எட்டி மர இலை அல்லது பொடி , வர மிளகாய்
உங்களின் நாளாந்த பொருளாதார வாழ்வில் ஏதேனும் தடையோ.. தாமதமோ.. ஏற்பட்டிருந்தால், எதிரிகளின் எதிர்மறை ஆற்றல் பிரயோகம் காரணமாக இருக்கலாம். இந்த தருணத்தில் செவ்வாய்க் கிழமையை தெரிவு செய்து அன்றைய தின செவ்வாய் ஹோரை தருணத்தில் நீங்கள் சந்தேகிக்கும் நபரின் அல்லது உங்களது நேரடி எதிரியின் பெயரை ஒரு தாளில் எழுதி, அந்த தாளில் எட்டு வர மிளகாயை வைத்து எரித்து விட வேண்டும். இதனால் குறிப்பிட்ட நபரால் வீட்டுக்குள் பரவ செய்திருக்கும் மறைமுகமான எதிர்மறை ஆற்றல் அழியும். விலகும். மறையும்.
அத்துடன் மட்டும் நில்லாமல் செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி புகை போடும்போது அந்த புகையுடன் எட்டி மர இலைகளை அல்லது எட்டி மரப் பொடிகளை அந்த தூப புகையுடன் கலந்து விடவும். எட்டி மர இலைகள் எரியும் போது அல்லது எட்டி மர பொடிகள் புகையை விடும் வெளியே விடும் போது உங்களது வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி வெளியே செல்லும்.
இதற்குப் பிறகும் கண் திருஷ்டி , எதிரிகள் தொல்லை, மறைமுக எதிரிகள் விலகவில்லை என்றால் செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அன்றைய தினம் மாலை ஏழு மணி அளவில் ஒரு பூசணிக்காயின் மேற்பகுதியை சிறிதளவு வெட்டி எடுத்து, அதில் வேப்ப எண்ணெயை விட்டு விளக்கேற்ற வேண்டும்.
இரண்டு மணி தியாலம் அந்த விளக்கு எரிந்த பிறகு.. அந்த பூசணிக்காயை இரவு 9 மணி அளவில் வாசலுக்கு எடுத்துச் சென்று, வாசலுக்கு வெளியே உடைத்து விட வேண்டும்.
இப்படி மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் உங்களுடைய மறைமுக மற்றும் நேரடி எதிரிகளின் தொல்லை குறைந்து உங்கள் வாழ்க்கையில் இன்பம் பெருகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM