இன்றைய திகதியிலும் எம்முடைய தாய்மார்கள் பிள்ளை பிறந்ததும் தாய்ப்பாலை புகட்டுவார்கள். பெரும்பாலான பிள்ளைகள் தாய்ப்பாலை சரியாக அருந்தும். ஆனால் சில பிள்ளைகளால் தாய்ப்பாலை சரிவர அருந்த இயலாது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்.. தாய்ப்பாலை அருந்துவதற்கு உதவி புரியும் நாக்கு பகுதியின் இயக்கத்தில் பாரிய தடை அல்லது அசௌகரிய நிலை ஏற்பட்டிருப்பதால் தாய்ப்பாலை அருந்த இயலாது.
இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் அன்கிலொக்லொஸியா என்றும், டங்க்- டை என்றும் குறிப்பிடுகிறார்கள். பிறக்கும் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் இத்தகைய பாதிப்பிற்கு அதிக அளவில் ஆளாகுவதாக வைத்திய நிபுணர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்த தருணத்தில் அவர்களின் நாக்கு பகுதியின் இயக்கத்தில் குறைபாடு உண்டாகிறது. இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து நவீன சிகிச்சை மூலம் முழுமையாக நிவாரணம் வழங்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய நாக்கு பகுதியின் அடியில் ஒரு சிறிய தசை இணைக்கப்பட்டிருக்கும். இந்த தசை நாக்கினை மேலண்ணம், கீழண்ணம் , பற்கள், வாய்க்கு வெளிப்பகுதி ஆகிய இடங்களில் இயல்பாக அசையும். இயங்கும்.
இந்த இயல்பான இயக்கத்தின் காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் தாயிடமிருந்து தாய்ப்பாலை உறிஞ்சி அருந்தும். சிலருக்கு இத்தகைய நாக்கின் அடிப்பகுதியில் உள்ள தசை பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாக முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் இருந்தாலோ அல்லது குறைபாடுகள் இருந்தாலோ அவர்களின் நாக்கு முழுமையாக இயங்காது.
குறிப்பாக வாய்ப் பகுதியில் மேலண்ணத்தை தொடவோ அல்லது வாயிலிருந்து வெளியே வரவோ இயலாது. இதனால் இவர்களுக்கு தாய்ப்பால் அருந்துவதில் அசௌகரியம் உண்டாகும்.
வளர்ச்சியில் பற்றாக்குறை ஏற்படக்கூடும். குறிப்பாக பேசுவதில் பின்னடைவு ஏற்படும். அதாவது தெளிவின்மை உண்டாகும். ஒவ்வொரு எழுத்தையும் அல்லது குறிப்பாக சில எழுத்துகளை அதற்குரிய ஒலிக் குறிப்பில் உச்சரிக்கத்தவறலாம்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பிள்ளைகளின் நாக்கு பகுதியை துல்லியமாக அவதானித்து அதனை சீரமைப்பதற்காக சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
சிலருக்கு சத்திர சிகிச்சைக்குப் பிறகு ஸ்பீச் தெரபி எனப்படும் சிகிச்சை மூலம் பேசுவதற்கு பயிற்சி வழங்கி, நாக்கின் இயங்கு தன்மையை மீட்டெடுப்பார்கள். மேலும் சிலருக்கு இத்தகைய தருணத்தில் லேசர் சிகிச்சையின் மூலமாகவும் இதற்கு நிவாரணம் அளிப்பார்கள்.
வைத்தியர் வேணுகோபால் தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM