தற்கொலை குண்டுதாரிகள் காரணமாக பிரிவினைவாதிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள புகையிரத பயணிகளை மீட்பது கடினமாக உள்ளதாக பாக்கிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகளிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரிகள் அமர்ந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
பலோச்சிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து ராவல்பிண்டிக்கு ஜவெர் எக்ஸ்பிரஸ் பயணம் செய்துகொண்டிருந்த புகையிர தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்த பிரிவினைவாதிகள் துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டு புகையிரதத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட புகையிர பயணிகளில் 155 பேரை மீட்டுள்ளதாக பாக்கிஸ்தானின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புகையிர பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள பலோச்சிஸ்தான் விடுதலை இராணுவம் பலோச்சை சேர்ந்த அரசியல் கைதிகள் செயற்பாட்டாளர்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டவர்களை 48 மணித்தியாலத்திற்குள் விடுதலை செய்யாவிட்டால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள பொதுமக்களை கொலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளனர்.
215பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக பலோச்சிஸ்தான் இராணுவம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.புகையிரதத்தில் 450 பேர் வரை பயணம் செய்தனர் என பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
சில பயணிகள் கொல்லப்பட்டனர் - நேரில் பார்த்தவர்கள் தகவல்
புகையிரதத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் குவெட்டாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பயணிகள் தாக்கப்பட்டனர். சிலர் காயமடைந்தனர் சிலர் உயிரிழந்தனர் என புகையிரதத்திலிருந்த முகமட் அஸ்ரவ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM