சத்யராஜ் - சசிகுமார் - பரத் - இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

12 Mar, 2025 | 09:10 PM
image

தமிழ் சினிமாவில் கிராமப்புற ரசிகர்களை அதிகமாக கொண்டிருக்கும் நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் எம். குரு இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சத்யராஜ், சசிகுமார், பரத், மேகா ஷெட்டி, மாளவிகா, எம். எஸ். பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், சரவணன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கு பற்றினர். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் உள்ளிட்ட தமிழக டெல்டா பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சத்யராஜ்- சசிகுமார்- பரத்- மூவரும் முதல் முறையாக இணைந்து இருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-18 21:38:39
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40