ACCA நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகளில் CDB வெற்றியுடன் சிறந்து விளங்குகிறது

12 Mar, 2025 | 09:57 AM
image

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிலைபேறாண்மையில் ஒருங்கிணைந்த சிந்தனையை CDB வெளிப்படுத்துகிறது. ‘ஏனைய நிதிச் சேவைகள்’ பிரிவில் வெற்றி மக்கள், சூழல் மற்றும் இலாபத்திற்கான பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கடந்த வாரம் நடைபெற்ற பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தினால் (ACCA) வழங்கப்பட்ட இலங்கை நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகளின் 20ஆவது பதிப்பில், CDB ஏனைய நிதிப் பிரிவில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

Amrita School of Sustainable Futuresஇன் பேராசிரியர் சந்தோஷ் ஜெயராம் தலைமையிலான நடுவர் குழு, அதன் நடுவர் அறிக்கையில், CDBயின் அறிக்கை அதன் உத்தியை வெளிப்படுத்துவதில் தனித்து நின்றதாகவும், பத்து வருடகாலத்திற்கு தொழில்நுட்ப வளர்ச்சி சிறுவர்  ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஆட்டிசம் (Autism) ஆகியவற்றிற்கான அதன் நீண்ட கால அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

மூலோபாய உத்தி, நிர்வாகம், இடர் முகாமைத்துவம், அளவீடுகள் மற்றும் இலக்குகள் ஆகிய மதிப்பீட்டு அளவுகோல்கள் உடன் அறிக்கையின் ஒட்டுமொத்த விளக்கத்தில் நியாயமான விளக்கம், பொருள் தன்மை, அறிக்கையிடல் நிறுவனம் மற்றும் இணைப்புத் தகவல்களும் மதிப்பிடப்படுகின்றன. CDBஇன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி தமித்தென்னகோன் கூறுகையில், “நிலைபேறாண்மை அறிக்கையிடலின் தரத்தை உயர்த்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த விருது மீண்டும் வலியுறுத்துகிறது. எங்கள் தரநிலைகளை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் CDB,எதிர்காலத்தை மையமாகக் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right