திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு தன்னை கைது செய்ய முயல்­வ­தாக குறிப்­பிட்டு  அதனை தடுக்­கு­மாறு கோரி பொது பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரினால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு  எதிர்­வரும் 22 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.  

ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்­தவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இந்த மனு­வா­னது பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப், அணில் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில்  விசா­ரணை செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார, சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய உள்­ளிட்ட நால்­வரை பொறுப் புக் கூறத்­தக்க தரப்­பாக பெய­ரிட்டே இந்த மனு தாக்கல்  செய்­யப்­பட்­டுள்­ளது.

முறை­யான விசா­ரணை ஒன்று இல்­லா­மல்ட   தன்னைக் கைது செய்ய திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு முயல்­வ­தா­கவும், அதனால் தன்­னுடன் தொடர்­பு­பட்ட விசா­ர­ணைகள் நிறை­வுறும் வரை அல்­லது சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ளும் வரையில் தன்னை கைது செய்­வதை தடுத்து இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறும் அந்த மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

இன, மதங்­க­ளுக்கு இடையில் மோதல்­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக செயற்­ப­டு­வ­தாக தெரி­வித்து திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) ஒழுங்­க­மைக்­கப்­பட்ட  விசா­ரணை ஒன்று இன்று இன்றி தன்னை கைதுசெய்ய முயல்­வ­தா­கவும் இதனால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் ஞான­சார தேரரின் குறித்த மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இதனால் முறை­யான விசா­ரணை ஒன்று நிறை­வுறும் வரை தன்னை கைது செய்யவேண்டாம் என தடை உத்த­ரவு பிறப்பிக்­கு­மாறு கோரி­யுள்ள ஞான­சார தேரர், தனக்கு விடுக்­கப்­பட்­டுள்ள உயிர் அச்­சு­றுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ள நிலையில், அந்த விசாரணைக ளும் இடம்பெற்று வருவதையும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.