அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும்  சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - ஜனாதிபதி

Published By: Vishnu

11 Mar, 2025 | 08:21 PM
image

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும்  வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாதுகாப்பிற்காக அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இதன்போது கலந்துரைாடப்பட்டன.

பொருளாதார ரீதியாக வலுவூட்டல் தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன்,  இதற்காக சமுர்த்தி நிதியிலிருந்து 55 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதுடன், சர்வதேச தரங்களை கருத்திற்கொண்டு பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காத நபர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்குத் தேவையான  சட்ட மற்றும் நிறுவன வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் மலர்மதி கங்காதரன் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்தார் மேல்...

2025-04-24 11:48:48
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-24 10:35:54