எம்மில் பலரும் நண்பர்கள்- உறவினர்கள் - தொழிலதிபர்கள் - வங்கியாளர்கள் - என பலரின் நட்பை பெற்று அரசாங்கத்தின் அனுசரணையுடன் கடன் தொகையை பெற்றுக்கொண்டு, சிறிய அளவிலான வணிக நிறுவனத்தை தொடங்கி இருப்போம். இந்த நிறுவனத்தை தொடங்கும் தினத்தை மட்டும் அனுபவம் மிக்க ஜோதிட நிபுணரிடம் கேட்டு நல்ல நாள் பார்த்து தொடங்கி இருப்போம். ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்த்த வகையில் அமைந்திருக்காது.
விசுவாசமிக்க ஊழியர்கள் கிடைக்காத நிலை எதிர்பார்த்த அளவிற்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடாத நிலை எதிர்பார்த்த அளவிற்கு வணிகங்கள் நடைபெறாத நிலை இப்படி பல காரணங்களை கண்டறிந்து பட்டியலிடலாம்.
ஆனால் ஒரு காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக நல்ல காரியம் எதனையும் மேற்கொள்ள தொடங்கும் முன் அஷ்டமி நவமி ஆகிய தினங்களை தான் முதலில் அவதானிப்போம். இந்த இரண்டு நாட்களையும் கவனமாக தவிர்ப்போம். ஆனால் அஷ்டமியை தவிர்ப்பதும் , அதிலும் குறிப்பாக தேய்பிறை அஷ்டமியைத் தவிர்ப்பதும் தவறு என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நீங்கள் ஒரு புதிய காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் வெற்றி பெறும் என்கிறார்கள். அதிலும் காலபைரவரின் அருளைப் பெற்று அந்த பணியை தொடங்கினால் வெற்றி உறுதி என்கிறார்கள். .
உடனடியாக எம்மில் சிலர் சார் ! நாங்கள் நாள்- நட்சத்திரம் பார்த்து வணிகத்தை தொடங்கவில்லை என்றும், மற்றொரு பிரிவினர் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று தான் எங்களுடைய நிறுவனத்தினைத் தொடங்கினோம் என்றும், ஆனால் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை அள்ளி வழங்கவில்லை என்றும் கவலையுடன் குறிப்பிடுவார்கள்.
இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கால பைரவருக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வணங்கி வந்தால் உங்களுடைய பிரச்சனை அகலும்.
அதே தருணத்தில் உங்களுக்கு அறிமுகமான அல்லது அறிமுகமற்ற வீதியில் பயணிக்கும் போது செல்லப்பிராணி என கருதப்படும் நாய் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தால் அந்த உயிரற்ற உடலை முறையாக அடக்கம் செய்தால் நீங்கள் எப்படிப்பட்ட கெடு பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் இந்த செயலை மேற்கொண்ட பிறகு உங்களுக்கு நல்ல காலமும், சுப பலன்களும் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் உங்களுக்கு சந்திராஷ்டம தினங்களில் பாரிய பாதிப்பு உளவியல் ரீதியாகவோ உடலில் ரீதியாகவோ ஏற்படுகிறது என்றால் அந்தத் தருணத்தில் தெரு நாய்களுக்கு உணவிடுவதும், இறந்த தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்யும் பணியை மேற்கொண்டால் சந்திராஷ்டமத்தின் பாதிப்பு கணிசமாக குறையும்.
இதனை செய்வதற்கு கால நேரமும் சூழலும் சௌகரியமாக இல்லை என்றால் உங்களின் தாயாருக்கு பாத பூஜை செய்தாலும் இத்தகைய பாதிப்பு மறையும்.
மேலும் தொழிலில் வெற்றி தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என்றால் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று அருகில் இருக்கும் சிவாலயத்தில் தனிச்சன்னதியுடன் வீற்றிருக்கும் கால பைரவருக்கு எட்டு எனும் எண்ணிக்கையில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வணங்கிட வேண்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM