டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

11 Mar, 2025 | 05:36 PM
image

எம்மில் சிலர் அதீத சோர்வு காரணமாக கொட்டாவி விடும் போது இயல்பான அளவை விட அதிக அளவிற்கு வாயை திறப்பார்கள். மேலும் வேறு சிலர் துரித உணவகத்திற்கு சென்று அங்கு உள்ள பர்கர் எனும் மேலத்தேய உணவினை சுவைக்கிறேன் என்ற பெயரில் வாயை இயல்பான அளவை விட கூடுதலாக திறந்து ருசிக்க தொடங்குவர்.

இதன் காரணமாக எம்முடைய காது பகுதியையும் , வாய்ப்பகுதியையும் இணைக்கும் மூட்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அவை காது வலியாக வெளிப்படக்கூடும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தற்போது நவீன பாணியிலான சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கலாம் என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.

எம்மில் சிலருக்கு காது வலி ஏற்படக்கூடும். இதற்காக பிரத்யேக வைத்திய நிபுணரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் போது பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவரும்.

இருப்பினும் காதில் வலி தொடரக்கூடும். இந்த தருணத்தில் காதில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. டெம்போரோரோமாண்டிபுலர் ஜாயின்ட் டிஸ்பங்க்ஷன் எனப்படும் இத்தகைய பிரத்யேக மூட்டு பகுதியில் ஏற்படும் சம சீரற்ற தன்மை காரணமாக காது வலி உண்டாகிறது.

சிலருக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக தலைவலி மற்றும் ஒரு பக்க காது மற்றும் தலைவலியும் ஏற்படக்கூடும்.

தொடர்ந்து சூயிங்கம்மை மெல்லுவதாலும் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள். 

 வைத்தியர்கள் இதன் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பதற்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

இதனை பிசியோதெரபி - அல்ட்ரா சவுண்ட் தெரபி போன்ற சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள். இதன் பின்னரும் நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை என்றால் எம் ஆர் எஸ் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பார்கள்.

வைத்தியர் விக்னேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16