நடிகர் 'கயல்' வின்சென்ட் நடிக்கும் 'அந்தோனி ' படத் தொடக்க விழா

11 Mar, 2025 | 05:36 PM
image

'கயல்' படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் வின்சென்ட் கதையின் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தோணி' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா இலங்கையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்து ராஜா - ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் உருவாகும் 'அந்தோனி' எனும் திரைப்படத்தில் 'கயல்' வின்சென்ட் , டி. ஜே. பானு, சுதர்சன் ரவீந்திரன், சௌமி, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஏ. பிரசாத்  மேற்கொள்கிறார். இலங்கையின் கடற்கரையோர மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ஓசை ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமணா - சுகா தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய் பாலசிங்கம் ஃபிலிம்ஸ் - ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணை தயாரிப்பு பணியை ஏற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.

இலங்கை - இந்திய கலைஞர்களின் கூட்டு தயாரிப்பான இந்த திரைப்படத்தின் தொடக்க விழா இலங்கையில் கோலாகலமாக நடைபெற்றது.  அத்துடன் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கி இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-18 21:38:39
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40