துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' வருணன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வருணன்' திரைப்படத்தில் ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போகோ சசி இசையமைத்திருக்கிறார். குடிநீர் வியாபாரத்தின் பின்னணியில் உள்ள விடயங்களையும், அரசியலையும் விரிவாக கொமர்ஷல் அம்சங்களுடன் பேசி இருக்கும் இந்த திரைப்படத்தை யாக்கை பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.
இதற்காக நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் தயாரிப்பாளர் அன்பு செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, 'ஆஹா' டிஜிட்டல் தள பிரதிநிதி கவிதா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' இது தண்ணீரை பற்றிய கதை . வட சென்னையில் வாழும் மக்களுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் இரண்டு முன்னணி விநியோகஸ்தர்களுக்கு இடையே நிகழும் மோதல் தான் கதை.
நாம் என்றைக்கு குடிநீரை பணம் கொடுத்து வாங்க தொடங்கினோமோ அன்றிலிருந்து ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் சாபம் எம்மை துரத்த ஆரம்பித்து விட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் தண்ணீரின் சிக்கனம் குறித்தும், சேமிப்பு குறித்தும், சுத்தமான நீர் எங்கும் கிடைப்பதில்லை என்பது குறித்தும் பிரச்சாரமாக இல்லாமல் மக்கள் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கிறோம் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM