பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என அடையாளம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Published By: Digital Desk 3

11 Mar, 2025 | 07:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)  

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய  பெண் வைத்தியர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக  இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற  அமர்வில்  உரையாற்றிய  எதிர்க்கட்சித் தலைவர்  அனுராதபுரம் வைத்தியசாலையில்  சேவையில் இருந்த பெண்  வைத்தியர் திங்கட்கிழமை (10) பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை  என்னவென்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையில்  அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசபந்து தென்னகோன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  கிடைக்கப்பெற்ற  நம்பதகுந்த தகவல்களுக்கு அமைவாகவே மாத்தறை பகுதியில் வீடொன்று சோதனை செய்யப்பட்டது.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று தமது அடையாள அட்டையை காண்பித்து, தான் வருகை  தந்தமைக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளனர். வீட்டை சோதனயிடுவதற்கு வீட்டில்  இருந்தவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

முன்னெடுக்கப்படும்  சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பத் தகுந்த  தகவல்களுக்கு அமைவாகவே  நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிடைக்கப்பெறும் தகவல்களை அலட்சியப்படுத்த முடியாது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் எடுத்துரைத்தார். இச்சம்பவம்  கவலைக்குரியது.

குற்றவாளியை கைது செய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் பிரிவுகள் ஊடாக  பரிசோதனைகள் பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவத்தில் இருந்து   தப்பிச்சென்ற நபர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார். விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20