ஊழல் மோசடியை இல்லாதொழிக்க நிர்வாக கட்டமைப்பு டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் ; சதுரங்க அபேசிங்க

11 Mar, 2025 | 09:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊழல் மோசடிகளுக்கு  சாதகமான  சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே கடந்த அரசாங்கங்கள்  அரச நிர்வாக கட்டமைப்பில்  டிஜிட்டல் முறைமையை செயற்படுத்தவில்லை. ஊழல் மோசடியை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அனைத்து  நிர்வாக செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என கைத்தொழில் மற்றும்  தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு   மற்றும்  டிஜிட்டல்  பொருளாதார  அமைச்சு  மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 

நவீன  பொருளாதார கொள்கைக்கு ஈடு செய்யும் வகையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கள்  அபிவிருத்தியடைய வேண்டும். 

கடந்த காலங்களில் இந்த அமைச்சுக்கள்  கவனத்திற் கொள்ளப்படவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்று நிலைபேறான நிலைக்கு செல்வதாயின்  டிஜிட்டல் பொருளாதாரம்  விரிவுப்படுத்தப்பட வேண்டும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 20.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைச்சுக்களின் கீழ் 12 நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய வலயத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அரச மற்றும் தனியார் நிர்வாக கட்டமைப்பில் ஊழல் மோசடியை தடுப்பதற்கு அனைத்து கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும்  டிஜிட்டல் (எண்ணியல்) முறைமையை அமுல்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கையில்  டிஜிட்டல் முறைமை  அரச  நிறுவனங்களில் கூட அமுல்படுத்தப்படவில்லை.

ஊழல் மோசடிகளுக்கு  சாதகமான  சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே கடந்த அரசாங்கங்கள்  அரச நிர்வாக கட்டமைப்பில்  டிஜிட்டல் முறைமையை செயற்படுத்தவில்லை.  

ஊழல் மோசடியை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அனைத்து  நிர்வாக செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவேண்டும அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19