மன்னிப்பு கேட்ட குமார் சங்கக்கார

By Raam

17 Jan, 2016 | 09:58 AM
image

பிக் பாஷ் லீக் டி20 தொடரின் ஹோ பார்ட் ஹுரிகேன்ஸ் அணியில் சிறப்­பாக விளை­யாட முடி­யாமல் போன­தற்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அந்த அணியின் வீர­ரு­மான குமார் சங்­கக்­கார மன்னிப்பு கோரி­யுள்ளார்.

இவர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹோபார்ட் ஹுரிகேன்ஸ் அணிக்­காக விளை­யாடி வந்தார். இதில் 8 போட்­டி­களில் விளை­யா­டிய சங்­கக்­காரவினால் 105 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. அடி­லெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதி­ரான கடைசி போட்­டியில் கூட 4 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்­நி­லையில் அணிக்கு சிறந்த பங்­க­ளிப்பு அளிக்க முடி­யாமல் போனதற்கு சங்­கக்­கார சக வீரர்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­ய­தாக அவ்வணியின் பயிற்­றுநர் டெமின் ரைட் தெரி­வித்­துள்ளார்.

மேலும், சங்­கக்­கார பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி வருவார் எனவும், அடுத்த சீசனில் அதி­ர­டியில் அவர் மிரட்­டுவார் என்றும் டெமின் ரைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right