அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ள பாலஸ்தீன ஆதரவாளரை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின்நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்கள் நியுயோர்க்கில் இடம்பெற்றவேளை அந்த ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கிய மஹ்மூட் காலிலை குடிவரவுதுறை அதிகாரிகள் வார இறுதியில் கைதுசெய்திருந்தனர்.
இவர் அமெரிக்க பல்கலைகழக பட்டதாரி என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான ஆவணங்களை கொண்டுள்ளவர்.
அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவிற்கு கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இது முதலாவது கைது என தெரிவித்திருந்த அவர் மேலும் பல கைதுகளின் ஆரம்பம் இதுவென குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை காலில் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக நியுயோக்கில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன,டிரம்பின் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நாங்கள் தற்போது மிகவும் ஆபத்தான யதார்த்தத்தை எதிர்கொள்கின்றோம்,எங்களின் சக மாணவர் கொலம்பியா சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் அரசியல் கைதியாகியுள்ளார் என கொழும்பிய பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கலிலின் விசா மற்றும் கிறீன்கார்ட்டினை இரத்துசெய்வதாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அவரை கைதுசெய்துள்ளனர் என கலிலின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கலிலிற்கு ஹமாசுடன் தொடர்புள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.கலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை பயங்கரமானது மன்னிக்கப்பட முடியாத செயல் என தெரிவித்துள்ள அவரின் வழக்கறிஞர் அமி கிறீர்,இது மாணவர்கள் செயற்பாடு மற்றும் அரசியல் பேச்சின் மீதான அமெரிக்கா அரசாங்கத்தின் வெளிப்படையான அடக்குமுறை என தெரிவித்துள்ளார்.
கருத்துசுதந்திரத்தை ஒடுக்குவதற்கு தாங்கள் குடிவரவு அமுலாக்கலை பயன்படுத்துவார்கள் என்பதை அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதி;காரிகள் அவருக்கு எதிராக இதுவரை எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை.
மான்ஹட்டனில் உள்ள பல்கலைகழகத்திற்கு சொந்தமான தொடர்மாடியில் அவரை கைதுசெய்த அதிகாரிகள் பின்னர் லூசியானாவில் உள்ள தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை எட்டு மாத கர்ப்பிணியான - அமெரிக்க பிரஜையான அவரது மனைவியையும் கைதுசெய்யப்போவதாக அதிகாரிகள் மிரட்டினார்கள் என கலீலின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM