(நா.தனுஜா)
பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதனை இலக்காகக்கொண்ட சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உலகளாவிய ரீதியில் பெண்களின் அடைவுகள், சமூக முன்னேற்றத்தில் அவர்களது பங்களிப்பு, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அவற்றிலிருந்து மீண்டெழும் ஆற்றல் மற்றும் சமத்துவத்துக்கான அவர்களது தொடர் போராட்டம் என்பவற்றுக்கான அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் வருடாந்தம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினம் அனுட்டிக்கப்படுகின்றது.
இவற்றில் எத்தகைய முன்னேற்றங்கள் அடையப்பட்டாலும், பாலின சமத்துவம் என்பது இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை. பெரும் எண்ணிக்கையான பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் முகங்கொடுத்துவருவதுடன் அவர்களுக்கான சமவாய்ப்புக்களும், சட்ட ரீதியான பாதுகாப்பும் மறுக்கப்படுகின்றன. பல பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றுக்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றது.
பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையினால் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பினும், சவால்கள் இன்னமும் தொடர்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமாக உள்ள பெண்கள் தலைமைத்துவப்பொறுப்பில் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்வாங்கப்படுகின்றனர். பெரும் எண்ணிக்கையான பெண்கள் வறுமையினாலும், பாலின அடிப்படையிலான வன்முறைகளினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி அவர்கள் நீதியை நாடுவதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்துகின்றோம். அதேபோன்று பெண்கள் அவர்களது உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் அசமத்துவம் மற்றும் அநீதிகளை முற்றாகக் களையவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம். அத்தோடு இதுசார்ந்த சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM