தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பமாட்டோம் ; தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்

Published By: Digital Desk 3

10 Mar, 2025 | 05:38 PM
image

தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை (10) பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போதும் காலை பதினொரு மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் எவரும் வருகை தந்து பதில் ஏதும் வழங்கவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் வருகை தந்திருந்தார். வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் பாடசாலை பெற்றோர்களில் இருந்து ஐவரை பாடசாலைக்குள்ளே கலந்துரையாட வருகை தருமாறு அழைத்ததன் அடிப்படையில் பெற்றோர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகளுக்கு சரியான பதிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் தரவில்லை எனவும் அவர் பிரச்சினையை சமாளிப்பதாக இருந்ததாகவும் வலயத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து தீர்வை பெற்று தருமாறு கோரிய போதும் உரிய வகையில் தமக்கான பதில் வழங்கப்படாத நிலையில் அவருடைய பதில்கள் திருப்தியற்ற நிலையிலும் இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்து பாடசாலையில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில் தமக்கான உரிய பதிலை உரிய தரப்புகள் வழங்காத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெதென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:01:59
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47
news-image

கஹட்டகஸ்திகிலியவில் கஜமுத்துக்களுடன் இருவர் கைது !

2026-08-09 16:28:07
news-image

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை...

2026-08-09 16:23:41