இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் ஸகவுல்லாஹ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவுகள் நினைவு படுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடினர்.

இந் நிகழ்வில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாகிஸ்தானின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் சப்ராஸ் அஹமட் கான் சிப்ரா மற்றும் பலர் இதன்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.