தமிழின் பிரபல நடிகர்களான வைபவ் - சுனில் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் 'பெருசு ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெருசு' எனும் திரைப்படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா,, சாந்தினி, விடிவி கணேஷ், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, சுவாமிநாதன், கஜ ராஜ், பால சரவணன் , முனீஸ்காந்த் , தீபா, 'நக்கலைட்ஸ்' தனம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்யா திலகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் , பெவாஜா ஸ்டுடியோஸ் , எம்பார் லைட் ஸ்டுடியோஸ் , ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் , ஹர்மான் பெவாஜா , ஹிரண்யா பெரேரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் 'Tentigo'எனும் பெயரில் சிங்களத்தில் உருவாகி சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதினை வென்றுள்ளது. தற்போது தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் முக சுழிப்பற்ற ஆபாசத்தை பேசுவதால் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''மேலத்தேய நாடுகளில் அடல்ட் கன்டன்டுகளை அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்குகிறார்கள். அந்த வகையில் தமிழில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அடல்ட் கொமடி திரைப்படம் இது '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM