நடிகை கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஃகேனம் 'எனும் திரைப்படத்தின் டைட்டில் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் உதய். கே இயக்கத்தில் உருவாகி வரும் 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன், ஆதித்யா மேனன், பிரவீண் ராஜா, ரமேஷ் திலக், ஆதித்யா ஷிவ் பிங்க் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்பிற்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சாண்டி எழுத, பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான பரத் வீரராகவன் மற்றும் திரியா பாண்டியன் ஆகிய இணைந்து பாடியிருக்கிறார்கள்.
மேலத்தேய தாள லயத்தின் பின்னணியில் றாப் பாடலாகவும், பெண்களுக்கான தன்னம்பிக்கை அளிக்கும் பாடலாகவும் உருவாகி இருக்கும் இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும்,
''காலத்திற்கு மாற்றம் உண்டோ நிதம்
காயத்திற்கு நியாயம் உண்டோ கதம்
துரோகத்திற்கு தீர்வு உண்டோ வதம்
கேள்விக்குள்ளே விடை உண்டோ மனம்
துன்பத்திற்குள் இன்பம் கண்டா நலம்
ஆழத்திலும் ஏற்றம் கண்டா பலம்
வலிக்குள்ள வழி கண்டா வரம்
உன்னை நம்பி முன்னே சென்றாள் வெற்றி தினம்..
பின் குரல்கள் கேட்காதே
உன் இலக்கை மாற்றாதே
மூன்றெழுத்தை விட்ராதே
உன் செயல் என்பது
உன் நிலை சொல்லும்
' அஃகேனம்'
எனும் வரிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இந்தப் பாடல்- இசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM