கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான நிவாரண சிகிச்சை

Published By: Digital Desk 2

10 Mar, 2025 | 04:47 PM
image

கண்புரையால் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவீதத்தினர் இதற்குரிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, முழுமையான நிவாரணத்தை பெறுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் சத்திர சிகிச்சைக்கு பிறகு ஒரு மாத காலம் வரை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சை நடைமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு தான் உங்களுடைய பார்வை திறன் மேம்படும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

முதுமை காரணமாகவும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உபாதை காரணமாகவும் எம்மில் ஐம்பது வயதை கடந்த ஆணிற்கும், பெண்ணிற்கும் கண் புரை பாதிப்பு ஏற்பட்டு, பார்வையில் தடுமாற்றம் ஏற்படக்கூடும். 

இவர்களுக்கு அருகில் உள்ள  வைத்தியசாலைக்கு சென்று, அங்குள்ள வைத்திய நிபுணர்களை அணுகி, அவர்கள் பரிசோதித்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். தருணத்தில் சத்திர சிகிச்சையுடன் உங்களுடைய பார்வைத்திறன் மீட்டெடுக்கப்படுவதுடன் தொடர்ந்து பாதிப்பு நிகழாமல் இருப்பதற்காக வைத்தியர்கள் பரிந்துரை பட்டியலை முன் வைப்பர். 

இந்தப் பட்டியல் ஒரு மாத காலம் அல்லது ஒன்றரை மாத கால அவகாசத்தினை கொண்டிருக்கும். இந்த தருணத்தில் வைத்தியர்கள் நான்கு வெவ்வேறு வகையினதான கண்களில் செலுத்திக் கொள்ளக்கூடிய பிரத்யேக மருந்தியலை பரிந்துரைத்திருப்பார்.  இந்த நான்கு வகையினதான மருந்தினை தவறாமல் பாவிக்க வேண்டும். சிலருக்கு இதை தவிர்த்து வேறு சில பிரத்யேக மருந்துகளையும் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கலாம்.

தற்போது கண்புரைக்கான சத்திர சிகிச்சை மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் இதனுடைய வெற்றி வீதம் என்பது அதிகம். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மறுநாள் அல்லது மூன்று நாட்களுக்குள் செல்போனை பார்வையிடுவது போன்ற அனைத்து பார்வை திறன் கொண்ட பணிகளை மேற்கொள்ளலாம். அதே தருணத்தில் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை நீர் தொடர்பான சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது. 

டொக்டர் அமர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16