இன்றைய திகதியில் எம்முடைய பெற்றோர்களுக்கு இருக்கும் பாரிய சவால் என்ன என்றால் பிள்ளைகளின் கல்வி. எம்முடைய பிள்ளைகள் பாடசாலைகளில் பயின்று அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடைய வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாவதில்லை.
இதே தருணத்தில் எம்முடைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளை நிறைய வாசிக்கின்றது பயிற்சியும் பெறுகிறார் ஆனால் தேர்வு கூடத்திற்கு சென்று எழுதும் போது மட்டும் கவனச்சிதறலுக்கு ஆளாகி பதற்றத்திற்கு ஆளாகி அதிக பெறுபேறுகளை பெறுவதற்கு தவறி விடுகிறார் என கவலை கொள்வார்கள்.
இத்தகைய பெற்றோர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இதனை முழு நம்பிக்கையுடன் பின்பற்றினால் உங்களுடைய பிள்ளைகளும் கல்வியில் கவனத்தை செலுத்தி சித்தி அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி.
கல்விக் கடவுளான சரஸ்வதியின் பிரத்யேகமான திருவுருவப் படத்தை உங்களுடைய பூஜை அறையிலும், உங்களுடைய பிள்ளைகள் வாசிக்கும் அறையிலும் இடம்பெற வைக்க வேண்டும். கல்விக்கான மகான் என கருதப்படும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவப் புகைப்படத்தையும் உங்களுடைய பிள்ளைகளின் கவனத்தில் படும் இடத்தில் வைக்க வேண்டும்.
இவருடன் ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாம்பாள், விவேகானந்தர், ஆகிய மூவரின் புகைப்படத்தையும் உங்களுடைய பூஜையறையிலோ வரவேற்பு அறையிலேயோ இடம்பெறச் செய்து அதனை நாளாந்தம் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். இதன் போது ஒரு கோப்பை நீர் + சிறிதளவு டைமண்ட் கல்கண்டு+ இரண்டையும் வைத்து கல்வியில் புலமை வேண்டும். உயர்கல்வி கற்பதற்கான தகுதியை பெற வேண்டும் என பிரார்த்தனையை மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சரின் இறையாற்றல் பரவி, உங்களுக்குள் இருக்கும் கல்வியை கற்பதற்கான தடையை அகற்றி, வெற்றி பெற வைப்பார்.
கல்விக்கு அதிபதி புதன் பகவான் என்பதால் உங்கள் பிள்ளைகளுடைய தாய் மாமன் உறவில் இருப்பவர்களையோ அல்லது அந்த உறவினை போல் அங்கீகரித்திருப்பவர்களையோ அவர்களின் ஆசியை உங்கள் பிள்ளைகள் பெற்றாலும் கல்வியில் இருக்கும் தடை அகலும்.
புதன் பகவானின் அம்சமாக எம்மிடையே உறவாடும் திருநங்கைகளுக்கு பச்சை வண்ண புடவை, உணவு, குடிநீர், ஆகியவற்றை தானமாக வாங்கித் தந்தாலும் , அவர்களிடம் ஆசியை பெற்றாலும், உங்கள் பிள்ளைகளுக்கு இருந்த கல்வி தொடர்பான தடை விலகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM