SHIHAR ANEEZ
economynext
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவுடன் தொடர்புவைத்திருக்கின்றார் என அதிகாரிகள் சந்தேகிக்கும் மருத்துவர் ஒருவர் தன்மீதான சந்தேகங்களை நிராகரித்துள்ளார்.
தனக்கு வன்முறை நோக்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் தான் சட்டத்தை மீறியிருந்தால் அரசாங்கம் தன்னை கைதுசெய்யலாம் என தெரிவிக்கின்றார்.
அவர் தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ஆனால் அந்த பகுதி மக்கள் அவரும் அவரை பின்பற்றுபவர்களும் வழக்கத்திற்கு மாறான கருத்துக்களை கொண்டுள்ளனர் இது அப்பகுதியில் உள்ள முக்கிய முஸ்லீம் குழுவுடன் மோதலிற்கு வழிவகுத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.
2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பகுதி அதிகாரிகளின் கவனத்தின் கீழ் வந்துள்ளது.
கல்முனை வடக்கு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவின் மருத்துவர் கல்முனையில் சுப்பர் முஸ்லீம்கள் என்ற குழுவிற்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்படுவதை மறுத்தார்.
இது வெறும் அர்த்தமற்ற குற்றச்சாட்டு,நான்சட்டங்களை மீறியிருந்தால் பாதுகாப்பு தரப்பினர் என்னை கைதுசெய்யலாம் என அவர் தெரிவித்தார்.
எனது நடத்தை குறித்து எந்த விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார் என அவர் தெரிவித்தார்.
சாரம் அணிந்தநிலையில் காணப்பட்ட ஸ்ரீஜெயவர்த்தனபுர மருத்துவபீட பட்டதாரியான 51 வயது மருத்துவர் சுப்பர் முஸ்லீம் அமைப்புடன் தனக்கு எந்த தொடர்புமில்லை என தெரிவித்தார்.
2019 இல் மற்றுமொரு இஸ்லாமிய அமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சிலர் தனது பெயரை சுப்பர் முஸ்லீம் அமைப்புடன் தவறுதலாக தொடர்புபடுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள்ஒரு அமைப்பில்லை,எங்;களிற்கு தப்லீக் ஜமா அத் என்ற அமைப்புடன் கருத்துவேறுபாடு எழுந்தவேளை நாங்கள் சுப்பர் முஸ்லீம்கள் என முத்திரை குத்தப்பட்டோம் என அவர் குறிப்பிட்டார்.
நிலத்தில் சேர்ட் அணியாமல் அமர்ந்திருந்த அவரை சுற்றி அவரது 15 வயது மகன் உட்பட அவரை பின்பற்றும் மூவர் காணப்பட்டனர்.
பிரதான இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை விட எனது கருத்துக்களுடன் உடன்படுவதால் பலர் என்னிடம் வந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இஸ்லாத்தின் ஆன்மீக தன்மை தொடர்பான கருத்துக்களே பிரதான இஸ்லாமிய இயக்கத்துடன் இவர் முரண்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.இவர் பொருள்முதல்வாதத்தை விட ஆன்மீகத்தை அதிகம் ஆதரிக்கின்றார்.
தப்லீக் ஜமாத் என்பது சர்வதேச இஸ்லாமிய அமைப்பு . இலங்கையின் கிழக்கில் அதனை பின்பற்றுபவர்கள் உள்ளனர்.இந்த அமைப்பு முஸ்லீம்கள் மத்தியில் இஸ்லாமிய போதனைகளை ஊக்குவிப்பதுடன் வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்யுமாறும் ஊக்குவிக்கின்றது.
சுப்பர் முஸ்லீம் என்பது அராபிய குரான் கற்கைநெறிகளை வழங்கும் ஒரு இணையவழி கல்விதளமாகும்.தமிழ்மொழி யூடியுப் சனலும்; உள்ளது.
மருத்துவரின்கருத்துக்களும் சுப்பர் முஸ்லீமின் கருத்துக்களும் ஒரேமாதிரியானவையாக காணப்படுகின்றன இதன் காரணமாகவே தன்னை இந்த அமைப்புடன் இணைத்து பார்க்கின்றார்கள் என்கின்றார் அவர்.
முஸ்லீம்களை கல்வி மத சமூக விடயங்களில் வழிநடத்தும் பிரதான அமைப்பான ஏசிஜேயு சுப்பர் முஸ்லீம் சித்தாந்தம் குரானில் உள்ள தெளிவான வசனங்களிற்கு முரணானது என தெரிவிக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏசிஜேயு தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து 2021 இல் இலங்கை சுப்பர் முஸ்லீம் அமைப்பை தடை செய்தது.
எனினும் பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது.
கண்காணிப்பின் கீழ்
குறிப்பிட்ட மருத்துவர் 2019 முதல் பல பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் உள்ளார்.
என்னை பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் போதுமான அளவிற்கு விசாரணை செய்துவிட்டார்கள் என தெரிவிக்கும் அவர் நான் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கும் குற்றத்தடுப்பு பிரிவிற்கும் சென்று வந்துள்ளேன் என தெரிவிக்கின்றார்.
எனது நடமாட்டத்தினை இரவும் பகலும் புலனாய்வு பிரிவினர் கண்காணிக்கின்றனர் என்பது எனக்கு தெரியும் நான் வெளிப்படையாக இருப்பதன் மூலம் அவர்களின் பணியை இலகுவானதாக மாற்றிவிட்டேன் என தெரிவிக்கும் அவர் அவர்கள் எந்தவேளையிலும் வந்து சோதனையிடலாம் எனது வாயில் கதவுகள் திறந்தே உள்ளன,எனது தலைவிதியை கடவுளே தீர்மானிப்பார் வேறு எவரும் இல்லை என்பதால் நான் கவலைப்படவில்லை என குறிப்பிடுகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM