அனுரகுமார திசநாயக்க அதிகாரத்திற்கு வந்ததை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதை ஒரு அரசியல்அதிகாரத்தின் வர்க்க மாற்றமாக கருதமுடியாது என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்
டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
அவருடைய எழுத்து நடை மிகச்சிறப்பானது எந்தவொரு அரசியல் நிகழ்வையும் சுவைபடத்தெரிவிப்பார்.
இந்த நூல் மொழிபெயர்ப்பு மாதிரி தோன்றவில்லை, ஜெயராஜ் உடைய மொழிநடை போலவே காணப்படுகின்றது.
ஜெயராஜ் - தனபாலசிங்கம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த நூல் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன.
நான் என்னை ஒரு இடதுசாரி என அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
இடதுசாரி என்றால் வர்க்க இன சாதிய பெண்ணிய ஒடுக்குமுறைகளிற்கு எதிராக குரல்கொடுப்பவர்.
அதனை அடிப்படையாக வைத்து இந்த நூலை விமர்சனம் செய்கின்றேன்.
அனுரகுமாரதிசநாயக்க ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒரு வர்க்க மாற்றம் ஏற்படும் என்ற அனுமானத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
இடதுசாரி நட்சத்திரம் என ஏகேடியை குறிப்பிட்டுள்ளார்கள்.மாவோ குறித்து ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சீன வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார்.
ஏகேடி அல்லது அனுரகுமார திசநாயக்க ஒரு வர்க்கரீதியான புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றவில்லை.
அரகலவில் மக்கள் முறைமை மாற்றத்தை கோரியிருந்தார்கள்.இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் இளைஞர்கள் ஆண்கள் பெண்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் என பல தரப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர்.
பலமுற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்,நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும். காணாமல்போனோர் விவகாரம் உட்பட பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதன் ஊடாக ஒரு சமூகமமாற்றம் நிகழ்ந்தது, அந்த சமூக மாற்றத்தை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.
அவர்கள் இதனை சரியாக பயன்படுத்தியிருந்தார்கள்.
இது வர்க்கரீதியான மாற்றம் இல்லை.தேசிய மக்கள் சக்தியின் மேடையில் மேட்டுக்குடியினரை வர்த்தக சமூகத்தினரை காணமுடிகின்றது.
அனுரகுமாரதிசநாயக்க தன்னை ஒரு இடதுசாரியாக எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தவில்லை,தேசிய மக்கள் சக்தி ஒரு இடதுசாரி கட்சி என எந்த மேடையிலும் அறிவிக்கப்படவில்லை.
அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனுரகுமார திசநாயக்க செயற்பட்ட விதம் குறித்து பார்க்கவேண்டும், அவர் முதலில் ஒரு வர்த்தக சமூகத்தை சேர்ந்தவரை வணிகதட்டை சேர்ந்தவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி செய்த முதல் வேலை இதுதான்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்வதேச நாணயநிதியத்தின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை கடுமையாக விமர்சித்திருந்த தேசிய மக்கள் சக்தி அதனை பரிசீலிப்பதே முதல் நடவடிக்கை என தெரிவித்திருந்தது.
வென்ற பிறகு ரணில்விக்கிரமசிங்க காலத்தின் அதேகடன்மறுசீரமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கின்றார்கள்.சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை ஏகேடி முன்னெடுக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயத்தின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தின் முழுபழுவையும் சாதாரண மக்கள் மீது திணித்தார்.
வர்க்கமாற்றம் என்றால் வேறு திட்டத்தை இவர்கள் முன்வைத்திருக்கவேண்டும் ஆனால் இவர்கள்அதனை செய்யவில்லை.
ஏன் அப்படி செயற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியிடம் கேட்டால் வெளிப்படையாக செய்ய முடியாது என்கின்றார்கள்.
ஏன் செய்ய முடியாதுஇ
அனுரகுமார திசநாயக்க நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி - இலங்கையில் கடவுளிற்கு நிகரானவர்.
ஜேஆர்ஜெயவர்த்தன முதன் முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்தவேளை அதனை முதலில் எதிர்த்தவர்கள் இடதுசாரிகள் . அதனை ஒரு கொள்கை பிறழ்வாக கருதினார்கள்.
நான்கு மாதங்கள் ஆகிவிட்டது - நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்றவர்கள் தற்போது அந்த பேச்சு மழுங்கிவிட்டது.
ஊழியர் சேமலாப நிதியம்
எங்கள் சம்பளத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதியத்திற்கான ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்கின்றனர்.
அதனை பயன்படுத்தியே ரணில்விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்தின் கடன்மறுசீரமைப்பினை முன்னெடுத்தார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு உள்ள நிலையில் எதனையும் செய்யலாம் ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது என்கின்றனர்.தட்டிக்கேட்காத அரசாங்கம் இடதுசாரி அரசாங்கமாக இருக்க முடியாது.
பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை 1979 முதல் எதிர்த்தவர்கள் இடதுசாரிகள்.
முதலில் தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு அது பயன்படுத்தப்பட்டது.பின்னர் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவோம் என்கின்றனர்.
டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய எழுத்தில் ஏகேடியை ஒளிரும் சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பல தொழிலாளர்களிற்கு வானம் இருண்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா
வீட்டை சுத்தம் செய்கின்றனர் ஆனால் அத்திபாரம் குடையப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைப்பு முறை மாற்றம் இன்னமும் நிகழவில்லை.
இன்று வரை வர்க்கரீதியான மாற்றம் நிகழவில்லை.
ஏகேடியின் வாழ்க்கையை இந்த நூலில் உத்வேகம் தரும் கதையாக குறிப்பிடுகின்றனர்.
அவரது வீடு எரிக்கப்பட்டது,பல்கலைகழகத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தார்.ஒளிந்து வாழ்ந்தார் என அவரை பற்றி எழுதியுள்ளனர்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கிரேட் தாச்சரும் இவ்வாறான ஒரு உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வந்தவர்தான் ஆனால் அவரே நவதாரளவாத கொள்கையை முன்னெடுத்தார், தொழிற்சங்க உரிமைகளை மறுத்தார்.
நரேந்திரமோடியும் உழைக்கும் வர்க்க பின்னணியில் இருந்து வந்தவர்,தேநீர் கடையில் வேலைபார்த்தவர் அவரை இன்று பாசிஸ்ட் என வர்ணிக்கின்றனர். தலித்துக்கள் முஸ்லீம்களிற்கு எதிராக செயற்படுகின்றார்.
உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வந்தவர்கள் ஒடுக்குமுறையில் ஈடுபட்டார்கள் என்பது வரலாறு.
ஜேவிபி தனக்கு தேவையான போது இந்திய எதிர்ப்பையும் இனவாதத்தையும் பயன்படுத்தியது.
தேசிய மக்கள் சக்தி உருவானது வர்க்க போராட்டத்தினால் இல்லை
தேசிய மக்கள் சக்தி வர்க்கரீதியிலான அரசியல் கட்சிஎன்பதை விட மக்கள்மத்தியில் எந்த விடயம் எடுபடுமோ அதனை பயன்படுத்தும் கட்சி.
இனவாதம் பிரபல்யமானதாக அரசியலுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகயிருந்தபோது அதனை பயன்படுத்தினார்கள்.
பொருளாதாரம் அரசியலுக்கு பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டவேளை அதனை பயன்படுத்தினார்கள்.
1970களில் இருந்து அமெரிக்க ஒரு மென்வலுவை பேணுவதற்கு சில திட்டங்களை முன்னெடுத்தது.
குறிப்பாக பனிப்போர் காலத்தில் வேறுவேறு நாடுகளில் உணவு மருத்துவ உதவிகளை வழங்கினார்கள்.ஆபிரிக்கநாடுகளில் யுஎஸ்எயிட் மூலம் உதவிகளை முன்னெடுத்தார்கள் மக்கள் பட்டினியாக இருக்கும்போது உணவினை வழங்கினார்கள்.
மிகவும் அடிப்படையான தேவைகளை யுஎஸ்எயிட் மூலம் வழங்க தீர்மானித்தார்கள் வழங்கினார்கள்.
இலங்கைக்கு வரும்போது எமது அரசியலை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்குகாசு கொடுத்தார்கள்.
2017ம் ஆண்டு தொழில்திணைக்களத்திலிருந்து தொழில் சீர்திருத்த திட்டம் வெளியானது இதற்கு யுஎஸ்எயிட் நிதி வழங்கியது.
தொழிலாளர்களிற்கான பாதுகாப்பை இல்லாமல்செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்
அதேவேளை இதற்கு எதிராக குரல்கொடுத்த அரசசார்பற்ற அமைப்புகளிற்கும் யுஎஸ்எயிட் நிதி வழங்கியது.
இரண்டுபக்கமும் காசு வழங்கப்பட்டது.
இலங்கை போன்ற நாடுகளிற்காக உதவி வழங்கும் நாடுகள் வழங்குகின்ற இந்த நிதி உதவிகள் அடிமட்டத்திலிருந்து வரும் எதிர்ப்பை கையாள்வதற்காகவே வழங்கப்படுகின்றது.
டிரம்பின் அரசாங்கம் வந்துள்ளது அவர் இதுவரை காணப்பட்ட பொருளாதார முறைகளில் இருந்து வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகின்றார். ஒரு பாதுகாக்கும் தன்மை கொண்டவராக உள்ளார்.
அவருக்கு வெளிநாடுகளிற்கு காசு கொடுக்க விருப்பமில்லை.
இன்று யுஎஸ்எயிட் நிதி இல்லாத காரணத்தினால் எத்தனையோ சிறிய சிறிய நிறுவனங்கள் பெரும்சவாலை எதிர்கொண்டுள்ளன.தங்கள் வேலைத்திட்டங்களை எப்படி முன்னெடுக்க போகின்றோம் என்பது அவர்களி;ற்கு தெரியாது ஆனால் நான் இதனை சிறந்த விடயமாக பார்க்கின்றேன்.
யுஎஸ்எயிட் போன்ற அமைப்புகளிடமிருந்து காசை பெற்றுக்கொண்டு நாங்கள் அரசியல் செய்தால் அது கடைசிவரைக்கும் ஒரு மாற்றத்திற்கான அரசியலாகயிருக்காது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM