கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று செயற்குழுவினர் ஒழுங்கு செய்திருந்த பெற்றோர்களுக்கான அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025, ஞாயிற்றுக்கிழமை (09) வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
18 அணிகள் பங்கேற்ற பரபரப்பான சுற்றுப்போட்டியின் வெற்றி கிண்ணத்தை தரம்-8 னை பிரதிநிதித்துவப்படுத்திய Master Mavericks அணியினர் கைப்பற்றினர்.
Runner-up ஆக தரம்-10ன் Colombo Lion Kings அணி வென்றது.
அதேநேரம் பெண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றிகிண்ணத்தினை தரம்-2 னை பிரதிநிதித்துவப்படுத்திய Galaxy Girls அணி தனதாக்கிக்கொண்டதுடன் Runner-up கிண்ணத்தினை OGA-A அணி கைப்பற்றியது.
பாடசாலையின் நிகழ்கால மாணவிகளின் பெற்றோர்களும், பழைய மாணவியரும் பங்குபற்றுகின்ற இந்த சுற்றுப்போட்டியின் பிரதம அதிதியாக பாடசாலையின் முதல்வர் ஸ்ரீமதி.யோகராணி சிவபாலன் கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதிகளாக பம்பலப்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி , பாடசாலையின் உப அதிபர் ஸ்ரீமதி.வதனா ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று செயற்குழுவின் செயலாளர், உறுப்பினர்கள் இதனை மிக சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தமை குறிக்கிடத்தக்கது.
மேலும், இப்போடிகள் இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டும் என்பதை பாடசாலை அதிபர் தனது உரையில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM