இன்றைய திகதியில் உலகில் பிறக்கும் ஐம்பதாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு Choroideremia என்ற அரிய வகை பார்வை குறைபாடு நோய் ஏற்படுகிறது. 

இந்த பாதிப்பு ஆண் குழந்தைகளைத்தான் அதிகளவில் பாதிக்கிறது என்றும், இது ஒரு மரபணு குறைபாட்டால் உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 3 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பார்வை குறைபாடு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இதன் காரணத்தினால் பாதிக்கப்படும். 

இது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிக்கிறது. அதனால் தான் இத்தகைய குறைபாடு உண்டாகிறது. 

இதற்கு தற்போது வரை முழுமையான சிகிச்சை கண்டறியப்படவில்லை என்றாலும் ரெட்டினா ஜீன் தெரபி என்ற சிகிச்சை மூலம் நிவாரணமளிக்கப்படுகிறது.

Dr. பத்ரிநாராயணன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்